Home செய்திகள்கீழக்கரை செய்திகள் பட்டாசு ஆலையில் பணிபுரியும் பெண்கள் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் வாங்கிய கடனை திருப்பி செலுத்த கட்டாயபடுத்தும் நிதி நிறுவனம்..

பட்டாசு ஆலையில் பணிபுரியும் பெண்கள் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் வாங்கிய கடனை திருப்பி செலுத்த கட்டாயபடுத்தும் நிதி நிறுவனம்..

by ஆசிரியர்


பட்டாசு ஆலையில் பணிபுரியும் பெண்கள் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் வாங்கிய கடனை வேலை இல்லாத நேரத்தில் திருப்பி செலுத்த நிதிநிறுவனங்கள் கட்டாயப்படுத்துவதாக கூறி கால அவகாசம் பெற்று தர வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கடன் பெற்ற பெண்கள் கோரிக்கை மனு அளித்தனர். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு 60 நாள்களைக் கடந்துள்ள நிலையில் பல்வேறு தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. வேலைக்குச் செல்ல அரசு சில தளர்வுகளை அளித்திருந்தாலும், ஏராளமானோர் வேலையின்றி தவித்துவருகின்றனர்.

இந்நிலையில் விருதுநகர் அருகே உள்ள வாடியூர் மற்றும் அயன் கரிசல்குளம் போன்ற பகுதிளில் பட்டாசு ஆலைகளில் பணிபுரியும் மக்கள் அதிகம் உள்ளார்கள். இந்த பகுதி பெண்கள் மகளிர் சுய உதவிக்குழு முலம் கடன் பெற்று உள்ளார்கள். அந்த தொகையை தற்போது போதிய வருமானம் இல்லாத நிலையில் திருப்பித்தர வேண்டும் என தனியார் நிதி நிறுவனங்கள் கட்டாயபடுத்தி மன உலைச்சல் ஏற்படும் வகையில் நடந்து கொண்டு வருகிறது. தொடர்ந்து கடனை திருப்பிச் செலுத்துமாறு தங்களை நெருக்கடிக்குள்ளாக்கி வருவதாகவும் கூறப்படுகிறது. பட்டாசு ஆலைகள் முழுமையாக செயல் படாத நிலையில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த கூடுதலாக 2 மாத காலம் அவகாசம் வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கண்ணனிடம் மகளீர் சுய உதவி குழுவினர் கோரிக்கை மனுவினை அளித்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!