Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கீழக்கரை குறுவணிகர்கள் நலன் காக்க முதலமைச்சருக்கு வீரகுல தமிழ் படை மனு…

கீழக்கரை குறுவணிகர்கள் நலன் காக்க முதலமைச்சருக்கு வீரகுல தமிழ் படை மனு…

by ஆசிரியர்

கீழக்கரை போன்ற ஊர்களில் தற்சமயம் உள்ள தடை உத்தரவால் அன்றாட வாழ்கையில் போருளாதார ரீதியாகவும், வணிக ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.  அரசாங்கம் வியாபாரிகளுக்கும், விவசாயகளுக்கும் பல சலுகைகள் இருந்தாலும் பல சங்கடங்களுக்கு ஆளாகிறார்கள்.  இதை தடுக்க கோரி கீழக்கரை வீரகுல தமிழ்படை ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் முதலமைச்சர் தனி பிரிவுக்கு மனு அனுப்பியுள்ளார்.

அம்மனுவில், “கொரோனா நோய் தொற்று பரவாமல் இருக்க அரசு இயற்றியுள்ள 144 தடை சட்டம் காரணமாக அயராது சேவையாற்றிவரும் அரசு ஊழியர்கள், மருத்துவர்கள், காவல்துறை அதிகாரிகளை போல் மக்களின் அடிப்படை அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகளும் மக்கள் சேவகர்களே. அப்படி இருக்க கீழக்கரையில் பாதுகாப்பு பணியில் இருக்கும் காவல்துறை அதிகாரிகள் காய்கறிகள் , உணவகங்கள், மளிகை கடைகளை நடத்திவரும் வியாபாரிகள், வீடுகளுக்கு எரிவாயு எடுத்துச்செல்லும் ஊழியர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோர்களின் வாகனங்களை தடுத்து நிறுத்தி. அவர்களது வாகனங்களில் பெயிண்ட் பூசி இனி வாகனம் வரக்கூடாது. வந்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று எச்சரிக்கின்றனர்.

தாங்கள் கடைகளை வைத்திருக்கிறோம் என்று சொன்னாலும் ஏற்க மறுக்கின்றனர். இந்த நெருக்கடிகளால் பலர் கடைகளை அடைக்கவேண்டிய சூழல் உருவாகிறது. இதனால் மக்களின் அத்தியாவசிய தேவைகள் கிடைப்பதில் சிக்கல் உருவாகலாம் எனவே வியாபாரிகள் மற்ற சேவையாளர்கள் தங்குதடையின்றி செல்வதற்கு அவர்களுக்கு முறையான அனுமதி அட்டையோ அல்லது அடையாள அட்டையோ வழங்கி இந்த பிரச்சனைகளுக்கு உரிய தீர்வு காண விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அருள்கூர்ந்து கேட்டுக்கொள்கிறேன்” என கூறியுள்ளார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!