இந்த வருடம் முதல் பெரியபட்டிணத்தில் 3 நாள் பெருநாள் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கீழக்கரை மண்மேட்டில் மெருநாள் கொண்டாட்டம் நடப்பது போல் பெரியபட்டிணத்திலும் செய்யது அலி ஒலீயுல்லா தர்ஹா திடலில் மூன்று நாட்கள் பெருநாள் கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பொழுது போக்கு அம்சங்களும், குழந்தைகளுக்கான விளையாட்டுக்கான ஊஞ்சல்களும் வந்துள்ளன. மின்சார ஒளி விளக்குகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. திருவிழாக்களில் உள்ளது போல் கடைகள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இனி கீழக்கரை செல்லத்தேவையில்லை, பெரியபட்டீணம் சுற்றுவட்டாரத்தீனர் பெருநாள் விடுமுறையை குடும்பம் குழந்தைகளுடன் பெரியபட்டிணத்திலேயே கொண்டாடலாம். அடுத்த அனாச்சரத்திற்கு அச்சாரமா அல்லது மக்களை தீமையை விட்டு தடுக்குமா இந்த புதிய் மணல்மேடு பொறுத்திருந்து பார்ப்போம்.
நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை அல்ஹிஜ்ரா சமூக நல அமைப்பு மற்றும் S.K.S முகம்மது உசேன் நண்பர்கள் செய்துள்ளனர்.
2 comments
சகோதரரே!எந்த அடிப்படையில் தீமையை விட்டு மக்களை தடுக்கும் இந்த செயல் என்று கருதிகின்றீர்கள் என்று தெரியவில்லை.
மணல்மேடு என்பது, ஆண்களும் பெண்களும் கலந்து அனாச்சாரத்நை்உருவாக்காமல், நமக்கு தெரிந்து எத்தனையோ இடங்களில் பெருநாள் தினத்தை சந்தோஷமாக கழிக்கும் வகையில் பெண்களுக்கான ஏற்பாடு செய்யப்படுமா என்பதுதான்.. நம்முடைய ஆதங்கம்தான.. ஆகையால் இன்று அனாச்சாரத்துடன் நடக்கும் மணல்மேடில் தனிப்பட்ட முறையில் உடன்பாடும் கிடையாது.. நாம் அதை சரி காணவும் இல்லை..
Comments are closed.