இன்று வளைகுடா நாடுகளில் ஈகைத் திருநாள் கொண்டாட்டம்..

புனித ரமலான் மாதம் நேற்றோடு நிறைவு பெற்றது. அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதமான முதல் நாளான இன்று (25-06-2017) ஈகைப் பெருநாள் சிறப்பாக சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், மற்றும் பல வளைகுடா நாடுகளில் பெருநாள் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. தொழுகையை தொடர்ந்து சிறப்பு பிரசங்கமும் நடைபெற்றது. அரபு மற்றும் வளைகுடா நாடுகளில் அதிகாலை 5.15 மணி முதலே பெருநாள் தொழுகை ஆரம்பம் ஆகி விட்டது.

அப்பெருநாள் தொழுகையில் உள்நாட்டு மக்கள் முதல் வெளிநாட்டு மக்கள் வரை ஏராளமானோர் கலந்து கொண்டார்கள். தொழுகையின் நிறைவில் ஓருவருக்கொருவர் ஆரத்தழுவி பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். பெரியவர்கள் குழந்தைகளுக்கு மிட்டாய்களும், காசுகளும் கொடுத்து தங்களுடைய சந்தோஷத்தை வெளிப்படுத்தினர்.