கீழக்கரையில் ஜும்மா பள்ளி, தவ்ஹீத் ஜமாத், வடக்கு தெரு நாசா பெருநாள் தொழுகை நேரம் அறிவிப்பு..

கீழக்கரை, “அல் மஸ்ஜிதுல் ஜாமிஉ” நடுத்தெரு, ஜும்ஆ மஸ்ஜிதில் ஈதுல் ஃபித்ர் நோன்பு பெருநாள் தொழுகை மற்றும் குத்பா இன்ஷாஅல்லாஹ் காலை 9.00 மணிக்கு நடைபெறும். அதைத் தொடர்ந்து அனைத்து ஜமாஅத்தினர் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி காலை 11.30 மணிக்கு நடைபெறும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதே போல் நபி வழித் தொழுகையான திடல் தொழுகை தவ்ஹீத் ஜமாத் சார்பாக தெற்கு, வடக்கு, 500 பிளாட் பகுதி, கிழக்கு பகுதியில் காலை 07.00 மணியளவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கீழக்கரை வடக்குத் தெரு சமூக நல அமைப்பு (NASA) சார்பாக காலை 7.15 மணியளவில் நடைபெறும் என்று அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. அதே போல் கீழக்கரை கல்வி தர்ம அறக்கட்டளை சார்பாகவும் புதுகிழக்குத் தெரு KECT திடலில் தொழுகை நடத்தப்படும் என்று அறியப்படுகிறது.