Home செய்திகள் பரமக்குடி அருள் சான்று பள்ளியில் களைகட்டிய சமத்துவ பொங்கல் விழா..

பரமக்குடி அருள் சான்று பள்ளியில் களைகட்டிய சமத்துவ பொங்கல் விழா..

by Askar

பரமக்குடி அருள் சான்று பள்ளியில் களைகட்டிய சமத்துவ பொங்கல் விழா..

பரமக்குடி அருகே அருள்சான்று பள்ளியில் கிச்சுகிச்சு தாம்பாளம், பல்லாங்குழி உள்ளிட்ட பழமையான விளையாட்டுக்கள் விளையாடி மழலைகளின் குத்தாட்டத்துடன் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே கச்சாத்தநல்லூரில் அருள் சான்று சிபிஎஸ்இ பள்ளி செயல்பட்டு வருகிறது. பங்குத்தந்தை திரவியம் தலைமையில் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பள்ளியின் தாளாளர் அகஸ்டின் கே ராஜ் முன்னிலை வகித்தார். பள்ளியின் முதல்வர் ஸ்டீபன் சவரிராஜ் அனைவரையும் வரவேற்றார். அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில் மழலைகள் பள்ளி வளாகத்தில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். விழாவில் குழந்தைகளுக்கு பாரம்பரியமிக்க விளையாட்டுகளான நொண்டி ஆட்டம், கிச்சு கிச்சு தாம்பாளம், பம்பரம் சுற்றுதல், தாயம் விளையாடுதல், பரமபதம் உள்ளிட்ட பழமையான விளையாட்டுகள் விளையாடப்பட்டது. மழலைகள் விளையாடிய பாரம்பரிய விளையாட்டுக்கள் கடந்த கால நினைவுகளுக்கு அழைத்துச் சென்றது. தொடர்ந்து மழலைகளின் குத்தாட்டம் களைகட்ட சமத்துவ பொங்கல் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் செய்து இருந்தனர். பள்ளியின் அட்மின் யுவனா நன்றியுரை கூறினார்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com