பாம்பன் பாலத்தை கடந்த கப்பல்கள்..

நாட்டின் பல பகுதிகளில் இருந்து வரும் சரக்கு கப்பல்கள் பாக் ஜல சந்தி, மன்னார் வளைகுடா கடல்களை கடந்து முக்கிய துறைமுகங்கள் செல்கின்றன. மன்னார் வளைகுடா – பாக் ஜலசந்தி இணையும் இடமான பாம்பன் ரயில் பாலத்தை கடக்க துறைமுக அதிகாரிகள் அனுமதி பெற வேண்டியுள்ளது.

இந்த நிலையில் நேற்று பாக் ஜல சந்தியில் இருந்து இரண்டு சரக்கு கப்பல்கள் ரயில் பாலம் தூக்கப்பட்டு மன்னார் வளைகுடா கடல் பகுதி சென்றன.