85 நாட்களுக்கு பின் பாம்பன் பாலத்தில் பயணிகளுடன் ரயில் சேவை மீண்டும் துவக்கம்..

கடந்த 04.12.2018 ல் பாம்பன் தூக்கு பாலத்தில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால், அன்றைய தினம் முதல் மண்டபம் – ராமேஸ்வரம் இடையே ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இதையடுத்து தூத்கு பாலத்தில் சீரமைப்பு பணி நடைபெற்றது. இதற்கிடையில் ரயில் வாரிய அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு மேற்கொண்டு ரயில் போக்குவரத்தை மீண்டும் இயக்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்தனர். ஆனால் ரயில்களை மீண்டும் இயக்குவது குறித்து உறுதி படுத்தவில்லை .

தற்போது, பணிகள் நிறைவடைந்ததையடுத்து 85 நாட்களுக்கு பின் 27/02/2019 தேதி முதல் பாம்பன் தூக்குப் பாலம் வழியாக இராமேஸ்வரத்திற்கு 10 கி. மீ., சீரான வேகத்தில் பயணிகளுடன் ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.