Home செய்திகள் இலங்கையில் இருந்து கடத்திவரப்பட்ட தங்கம் பாம்பன் அருகே பறிமுதல் ! நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை !!

இலங்கையில் இருந்து கடத்திவரப்பட்ட தங்கம் பாம்பன் அருகே பறிமுதல் ! நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை !!

by Baker BAker

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடற்கரைக்கு இலங்கை யிலிருந்து சட்டவிரோதமாக கடல் வழியாக தங்கக்கட்டிகள் கடத்திவரப் படவுள்ளதாக திருச்சியில் உள்ள சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து திருச்சியில் இருந்து சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவினர் இரண்டு குழுக்களாக பிரிந்து பாம்பன் மண்டபம் முந்தல் முனை,மற்றும் குந்துகால் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த வரை நிறுத்த சொல்லும் போது அவர் வேகமாக தப்பி ஓடினார். இதனை அடுத்து சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் அவரை விரட்டி பிடித்தனர். பின் வண்டியை சோதனை செய்தபோது சுமார் 4.634 கிராம் எடையுள்ள 916 தங்க கட்டிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கடத்தல் தங்கத்தையும், ராமேஸ்வரம் சந்தன மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த நம்புராஜன் என்பவரை கைது செய்து அவர் கொண்டு வந்த இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து ராமேஸ்வரம் சுங்கத்துறை அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். பின் கைது செய்யப்பட்ட நம்புராஜனிடம் விசாரணை நடத்தி பின் நாளை ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளதாக தகவல் தெரிவித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு சுமார் மூன்று கோடி ரூபாய் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com