Home செய்திகள் தேர்தல் முடிவுகள் அறிவிப்பதில் இழுபறி! நீயா நானா என போட்டி போடும் கட்சிகள்.போராட்ட களத்தில் பாகிஸ்தான்..

தேர்தல் முடிவுகள் அறிவிப்பதில் இழுபறி! நீயா நானா என போட்டி போடும் கட்சிகள்.போராட்ட களத்தில் பாகிஸ்தான்..

by Askar

பாகிஸ்தானில் கடந்த வியாழக்கிழமை பொதுத்தேர்தல் நடைபெற்றது. தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த உடன் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் முதல் சுற்று முடிவில் இம்ரான் கான் கட்சி அதிக இடங்களில் முன்னிலைப் பெற்றதாக கூறப்படுகிறது.அதேவேளையில் முடிவுகளை தேர்தல் ஆணையம் அறிவிக்காமல் காலம் தாழ்த்தியது. இதனால் நவாஸ் ஷெரீப்புக்கு ஆதரவாக தேர்தல் முடிவுகள் மாற்றப்படுவதாக இம்ரான் கான் கட்சியினர் குற்றம்சாட்டினர்.அதன்பின் வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு முதற்கட்ட தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்பின் மெல்ல மெல்ல முடிவுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. இன்னும் 8 தொகுதிகளுக்கு முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.இந்த நிலையில் முடிவுகள் தாமதமாக அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று இம்ரான் கான் கட்சியினர் நாடு தழுவிய போராட்டம் நடத்துகின்றனர்.இம்ரான கான், நவாஸ் ஷெரீப் ஆகியோர் தாங்கள்தான் வெற்றி பெற்றுள்ளோம் என மாறிமாறி அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.இதற்கிடையே நவாஸ் ஷெரீப் கட்சி, பிலாவால் பூட்டோ கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்க முயற்சி மேற்கொள்ளவதாக தகவல் வெளியாகியுள்ளது.அதேவேளையில் சிறுசிறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து இம்ரான் கான் கட்சி ஆட்சியமைக்க முயற்சித்து வருகிறது. நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) 73 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பிலாவால் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 இடங்களில் வெள்ளி பெற்றுள்ளது. ஏற்கனவே பொருளாதார சிக்கலில் தவித்து வரும் பாகிஸ்தான், தற்போது எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் ஸ்திரதன்மையான ஆட்சி அமைப்பதில் தவித்து வருகிறது. இம்ரான் கான் கட்சியின் ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர்கள் 93 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். மற்ற சிறுசிறு கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் 36 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.266 தொகுதிகளை கொண்ட பாகிஸ்தானில் ஆட்சியமைக்க 134 இடங்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!