Home ஆன்மீகம்மனிதநேயம் வடக்குத் தெரு நாசா அமைப்பு சார்பாக பெண்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது…

வடக்குத் தெரு நாசா அமைப்பு சார்பாக பெண்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது…

by ஆசிரியர்

கீழக்கரையில் வடக்குத் தெரு முகைதீனியா பள்ளி வளாகத்தில் வடக்குத் தெரு சமூக நல அமைப்பு (NASA) மற்றும் வடக்குத் தெரு சமூக நல தர்ம அறக்கட்டளை ( NASA TRUST) சார்பாக இன்று (08-08-2017) பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியான ORGANIC BABY – ஆரோக்கியமான குழந்தை என்ற சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த பெண்களுக்காகவே பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியை லயான் நிஷா தொகுத்து வழங்கினார். மேலும் இந்நிகழ்ச்சிக்கான ஓருங்கிணைப்பை வடக்குத் தெரு பெண்கள் மதரசா நிர்வாகிகள் செய்தனர்.

இந்த நிகழ்ச்சியில் POWER POINT PRESENTATION மூலம் முன்னோர்கள் பிரசவித்தது எப்படி??, எங்கே போனது சுகப்பிரசவம்??, எங்கிருந்து வந்தது சிசேரியன் முறை பிரசவம்??, சுகமான பிரசவம் வேண்டுமா??, குறைபாடில்லாத ஆரோக்கியமான குழந்தை வேண்டுமா??, நிம்மதியான, சந்தோசமான, ஆரோக்கியமான வாழ்கை அமைய வேண்டுமா?? என்ற அடிப்படையில் பெண்களுக்கு விழிப்புணர்வு விளக்கங்கள் வழங்கப்பட்டது.  அதேபோல் கலப்பட உணவால் பிறக்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் தீமைகளும் விளக்கப்பட்டது.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com