Home செய்திகள் அண்டம்பள்ளம் நாட்டு நலப் பணித்திட்ட முகாம் நிறைவிழா

அண்டம்பள்ளம் நாட்டு நலப் பணித்திட்ட முகாம் நிறைவிழா

by mohan

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அடுத்த அண்டம்பள்ளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் முதன்மைக் கல்வி அலுவலர்கள் அலுவலர் அவர்கள் அனுமதியுடன் மிகச் சிறப்பாக 7 நாட்கள் நடைபெற்றது. நாட்டு நலப்பணித் திட்ட முகாமிற்கு தலைமையாசிரியர். முனைவர்.மு. பிரசன்னா தலைமை தாங்கினார். விழாவினை ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் உமா வெங்கடேசன் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். பள்ளி வளாகம் தூய்மை செய்யப்பட்டு பூங்கன்றுகள் நடப்பட்டது. பழமை வாய்ந்த சிவன் கோவில் வளாகம் முருகன் கோயில் வளாகம் உழவாரப்பணிகள் மேற்கொண்டனர். ஊர் மக்களுக்கு கபசுர குடிநீர் காய்ச்சி வழங்கப்பட்டது. டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு கொரோனா விழிப்புணர்வு போன்றவற்றை மாணவச் செல்வங்கள் கிராம மக்களுக்கு எடுத்துரைத்தினர். தமிழ் ஆசிரியர் முருகையன் பார்த்திபன் தலைமையில் பட்டிமன்றம் நடந்தது. பாவலர் குப்பன் அவர்கள் இலக்கிய சொற்பொழிவு ஆற்றினார். திருவண்ணாமலை வாசகர் வட்ட தலைவர் வாசுதேவன் அவர்கள் தமிழின் சிறப்பும் இனிமையும் குறித்தும் , கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மாணவர்களும் அரசியல் சிந்தனையும் , எஸ் எஸ் இஸ்மாயில் அவர்கள் நலமோடு வாழ நம்பிக்கையாய் இரு இளைஞனை என்று தன்னம்பிக்கை உரை… என பல்வேறு தலைப்புகளில் சிறப்புரையாற்றினார்கள். சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி இயக்குனர் சௌம்யா, உடற்கல்வி ஆசிரியர் முத்துகிருஷ்ணன் அவர்கள் யோகா பயிற்சிகளை வழங்கினார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் காசி, கோவிந்தன் போன்றோர் முகாமில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். பள்ளியின் நலன் விரும்பிகள் வீரமணி, மாணிக்கம், குமார் அவர்கள் முகாமில் கலந்து கொண்ட மாணவச் செல்வங்களுக்கு வழங்கி சிறப்பித்தனர். நாட்டு நலப்பணித் திட்டத்தின் நினைவு பரிசாக மாணவச் செல்வங்களுக்கு கொய்யா மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. பள்ளி ஆசிரியர்கள் பார்த்தசாரதி பார்த்திபன், பாண்டியன்,பத்மா, கோவிந்தராஜ், கிருஷ்ணமூர்த்தி பிரபு கலந்து கொண்டு சிறப்பித்தனர்.சிறப்பு முகாமை திட்ட ஒருங்கிணைப்பாளர் லோகநாதன் அவர்கள் ஒருங்கிணைத்து சிறப்பாக நடத்தினார்.திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அடுத்த அண்டம்பள்ளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் முதன்மைக் கல்வி அலுவலர்கள் அலுவலர் அவர்கள் அனுமதியுடன் மிகச் சிறப்பாக 7 நாட்கள் நடைபெற்றது. நாட்டு நலப்பணித் திட்ட முகாமிற்கு தலைமையாசிரியர். முனைவர்.மு. பிரசன்னா தலைமை தாங்கினார். விழாவினை ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் உமா வெங்கடேசன் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். பள்ளி வளாகம் தூய்மை செய்யப்பட்டு பூங்கன்றுகள் நடப்பட்டது. பழமை வாய்ந்த சிவன் கோவில் வளாகம் முருகன் கோயில் வளாகம் உழவாரப்பணிகள் மேற்கொண்டனர். ஊர் மக்களுக்கு கபசுர குடிநீர் காய்ச்சி வழங்கப்பட்டது. டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு கொரோனா விழிப்புணர்வு போன்றவற்றை மாணவச் செல்வங்கள் கிராம மக்களுக்கு எடுத்துரைத்தினர். தமிழ் ஆசிரியர் முருகையன் பார்த்திபன் தலைமையில் பட்டிமன்றம் நடந்தது. பாவலர் குப்பன் அவர்கள் இலக்கிய சொற்பொழிவு ஆற்றினார். திருவண்ணாமலை வாசகர் வட்ட தலைவர் வாசுதேவன் அவர்கள் தமிழின் சிறப்பும் இனிமையும் குறித்தும் , கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மாணவர்களும் அரசியல் சிந்தனையும் , எஸ் எஸ் இஸ்மாயில் அவர்கள் நலமோடு வாழ நம்பிக்கையாய் இரு இளைஞனை என்று தன்னம்பிக்கை உரை… என பல்வேறு தலைப்புகளில் சிறப்புரையாற்றினார்கள். சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி இயக்குனர் சௌம்யா, உடற்கல்வி ஆசிரியர் முத்துகிருஷ்ணன் அவர்கள் யோகா பயிற்சிகளை வழங்கினார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் காசி, கோவிந்தன் போன்றோர் முகாமில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். பள்ளியின் நலன் விரும்பிகள் வீரமணி, மாணிக்கம், குமார் அவர்கள் முகாமில் கலந்து கொண்ட மாணவச் செல்வங்களுக்கு வழங்கி சிறப்பித்தனர். நாட்டு நலப்பணித் திட்டத்தின் நினைவு பரிசாக மாணவச் செல்வங்களுக்கு கொய்யா மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. பள்ளி ஆசிரியர்கள் பார்த்தசாரதி பார்த்திபன், பாண்டியன்,பத்மா, கோவிந்தராஜ், கிருஷ்ணமூர்த்தி பிரபு கலந்து கொண்டு சிறப்பித்தனர்.சிறப்பு முகாமை திட்ட ஒருங்கிணைப்பாளர் லோகநாதன் அவர்கள் ஒருங்கிணைத்து சிறப்பாக நடத்தினார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!