திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை மீனவர்கள் படகுகள் மூலம் மீட்க காரணமாக இருந்த மீனவ சங்க பிரதிநிதிகளை தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மாவட்ட கண்காணிப்பாளர்/தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் மரு.இரா.செல்வராஜ், மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர். கா.ப.கார்த்திகேயன், ஆகியோர் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தார்கள்.திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 17.12.2023 மற்றும் 18.12.2023 ஆகிய நாட்களில் பெய்த கனமழை வெள்ளத்தினால் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் சூழந்திருந்தது. இந்நிலையில், தண்ணீர் சூழ்ந்திருந்த மக்களை பாதுகாப்பாக மீட்பதற்கு உவரி, கூத்தங்குழி, இடிந்த கரை, கூட்டப்புளி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சின்னமுட்டம், தூத்தூர் ஆகிய மீனவ கிராமங்களில் இருந்து படகுகள் கொண்டு வரப்பட்டு, பொதுமக்கள் மீட்கப்பட்டுள்ளனர்.பொதுமக்களை பாதுகாப்பாக மீட்பதற்கு பிற கடலோர கிராமங்களிலிருந்து படகுகள் கொண்டுவர காரணமாக இருந்த மீனவ சங்க பிரதிநிதிகளை தமிழ்நாடு அரசின் சார்பாக தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் நன்றியை தெரிவித்துக் கொண்டதோடு, அவர்களை பாராட்டி, வாழ்த்து தெரிவித்தார்கள். இந்நிகழ்வில், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல் வகாப், திருநெல்வேலி மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன், முன்னாள் சட்டமன்ற பேரவைத்தலைவர் இரா.ஆவுடையப்பன், நெல்லை மாவட்ட நாட்டுப்படகு சங்கத்தலைவர் எரிக்ஜூடு உட்பட மீனவ பிரதிநிதிகள் பலர் உள்ளனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.