Home செய்திகள் நிலக்கோட்டை அருகே 15 ஆண்டுகளுக்குப் நிரம்பிய கண்மாய்.. விவசாயிகள் மகிழ்ச்சி

நிலக்கோட்டை அருகே 15 ஆண்டுகளுக்குப் நிரம்பிய கண்மாய்.. விவசாயிகள் மகிழ்ச்சி

by mohan

தேனி மாவட்டம், மஞ்சளாறு அணை, மருதாநதி, வைகை ஆறு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடுமையான மழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள சித்தர்கள் நத்தம் பிள்ளையார்நத்தம், எத்திலோடு, ஏ. ஆவாரம்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு 3 ஆறுகளின் நீர் பாசனத்திற்காக வருடம் தோறும் கொண்டுவரப்பட்டு நிரப்ப முயற்சி மேற்கொள்ளப்படும். இருப்பினும் பிள்ளையார்நத்தம் கண்மாய் நிறைந்து எத்திலோடு கண்மாய்க்கு தண்ணீர் வரத்து நின்றுவிடும் இந்த நிலை கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ந்து நீடித்து வந்தது. இந்தாண்டு 11 வது மடையில் இருந்து நீரை  எத்திலோடு, மற்றும் ஏ. ஆவாரம்பட்டி கண்மாய்களை   விவசாயிகளின் முயற்சி மற்றும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அரசு அதிகாரிகள், அரசியல் பிரமுகர்களின்  உதவியால் தொடர்ந்து எத்திலோடு கண்மாய்க்கு நீர் வரத்து கிடைக்கப்பெற்றது. தற்போது  13வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு நடந்த இடைத் தேர்தலின் திமுக தரப்பில் திமுக கூட்டுறவு துறை அமைச்சர் ஐ. பெரியசாமி மற்றும் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ .பி . செந்தில்குமார் பிரதான வாக்குறுதியாக எத்திலோடு கண்மாயும், ஏ. ஆவாரம்பட்டி கண்மாய்கள்  நிரப்பப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதன்படி தொடர்ந்து 3 ஆறுகளின் நீரை கொண்டு தற்போது எத்திலோடு கண்மாய் 15 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பி உள்ளதால் இப்பகுதி விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனை  தொடர்ந்து எத்திலோடு கண்களிலிருந்து ஏ.ஆவாரம்பட்டி கண்மாய்க்கு நிலக்கோட்டை தி.மு.க தெற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன் தலைமையில் விவசாயிகள் திறந்து வைத்து பூக்கள் தூவி வரவேற்றனர. இந்நிகழ்ச்சியில் நகர செயலாளர் கதிரேசன், ஒன்றிய கவுன்சிலர்கள் அறிவு என்ற சின்னமாயன், ரோஸ் நெடுமாறன், தியாகு, ஒன்றிய பொருளாளர் காளிமுத்து, ஒன்றிய துணைச் செயலாளர் வெள்ளிமலை  அதிகாரி பாஸ்கரன்உள்பட பலர் கலந்து கொண்டனர். நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com