தமிழகத்தில் உள்ள பாரம்பரிய அனுபவம் மருத்துவர்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும் என தீர்மானம்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் தமிழ்நாடு அரசு அலுவலர்கள் ஓய்வூதியர் சங்க கட்டிடத்தில் தமிழ்நாடு அனைத்து முறை அனுபவம் மருத்துவர்கள் சங்க மாநிலத் தலைவர் டாக்டர் ராசு முருகேசன் தலைமையில் மாநிலச் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாநிலச் செயலாளர்கள் பிஸ்வாஸ், ஜெயபாலன் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.மாநில உதவிச் செயலாளர் ஜேம்ஸ் வரவேற்று பேசினார். சங்கக் கூட்டத்தில் கீழ்க்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தில் உள்ள பாரம்பரிய அனுபவம் மருத்துவர்கள் தமிழ்நாட்டில் 3 லட்சம் பேர் உள்ளார்கள். இந்தப் பாரம்பரிய அனுபவம் மருத்துவர்களுக்கு தமிழக அரசு அங்கீகரிக்க வேண்டும். கடந்த 2018 ல்  மருத்துவ பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்தவர்களுக்கு ஆகஸ்ட் 2021 நேரடி தேர்வு நடத்தப்படும் என கூறி விட்டு பின்னர் டிகிரி முடித்து கவுன்சிலில் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே சான்றிதழ் வழங்கப்படும் என கூறி நிராகரித்ததை இக்கூட்டம் கண்டிக்கிறது. கடந்த 2018ல்  மருத்துவ புதிய நடைமுறை சட்டம் கொண்டுவந்த அனைத்து சிறிய ,பெரிய கிளினிக்குகளை பதிவு செய்து பின்னர் தொழில் செய்ய வேண்டும் கூறிய படி செயல்படுத்த வேண்டும் எனவும், மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்தவர்கள் மட்டுமே பதிவு செய்யப்படும் பாரம்பரிய மருத்துவர்களை   பதிவு செய்ய இயலாது எனவும் மீறினால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை அரசு அதிகாரிகள்  மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்றும்,60 வருட காலமாக தமிழக அனுபவ பாரம்பரிய மருத்துவர்கள் போராடியும் எந்த உரிமையும் கிடைக்கவில்லை. எனவே இதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக மருத்துவ நல வாரியம் தமிழக அரசு தமிழ்நாடு அனைத்து முறை அனுபவம் மருத்துவர்களின்  வாழ்வாதாரம் மேம்பட அரசுக்கு கோரிக்கை வைக்கப்படுகிறது. இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அறப்போராட்டம் நடத்தப்படும் என சங்கக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில் சங்கப் பொருளாளர் ராஜன் நன்றி தெரிவித்தார்.படவிளக்கம்: தமிழ்நாடு அனைத்து முறை அனுபவ மருத்துவர்கள் சங்க கூட்டம் நடந்த போது எடுத்த படம்

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

உதவிக்கரம் நீட்டுங்கள்..