கிருஷ்ண ஜெயந்தி விழா முன்னிட்டு அன்னதானத்தை தொடங்கி வைத்த தொகுதி எம்.எல் ஏ……….

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள காஞ்சிரங்குடி கிருஷ்ணாபுரத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்து ராமலிங்கம் விளையாட்டுப் போட்டி மற்றும் அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் திருப்புல்லாணி ஒன்றிய சேர்மன் புல்லாணி கிழக்கு ஒன்றிய செயலாளர் நாகேஸ்வரன், காஞ்சிரங்குடி ஊராட்சி மன்றத்தலைவர் முனியசாமி, தில்லையேந்தல் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட கவுன்சிலர் ஆதித்தன் ,ஒன்றிய கவுன்சிலர்கள் கோவிந்த மூர்த்தி, கருத்த முத்து, திருப்புல்லாணி மேற்கு ஒன்றிய கவுன்சிலர் கார்த்திகேஸ்வரி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.