
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஆலோசனைக்கூட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ரெஜினா நாயகம் தலைமையில் நடைபெற்றது. ஒன்றியக்குழு துணைத்தலைவர் யாகப்பன் , வட்டார வளர்ச்சி அலுவலர் முனியாண்டி, வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) கிருஷ்ணன் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். ஊராட்சி ஒன்றிய அலுவலக மேலாளர் ராஜ்மோகன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் வீடுகள் தோறும் குடிநீர் வழங்கிடவும், அனைத்து கிராமங்களிலும் சாலை வசதிகளை மேம்படுத்தவும், குடிநீர் மற்றும் அடிப்படைத் தேவைகளை உடனடியாக நிறைவேற்றுவது உள்ளிட்ட சுமார் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. ஒன்றிய கவுன்சிலர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் பிற துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.படவிளக்கம்: நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ரெஜினா நாயகம் தலைமையில் நடந்த போது எடுத்த படம்.
நிலக்கேட்டை செய்தியாளர் ம.ராஜா
You must be logged in to post a comment.