குவாரிகள் இயங்க அனுமதி கோரி ஆட்சியரிடம் மனு:

மதுரையில் டிப்பர் லாரிகள் வைத்து கட்டுமானத்திற்கு தேவையான கிராவல், கிணற்றுமண் மற்றும் எம்.சாண்ட் மண் சப்ளை செய்து வருகிறோம்.ஆனால், கடந்த 4 மாதமாக அரசு அனுமதி பெற்று குவாரிகள் இயங்கவில்லை. அதனால், கட்டுமான தொழில் மற்றும் அதைச் சார்ந்த தொழிலாளர்கள் அனைவரும் மிகவும் பாதிப்புக்குள்ளாகி உள்ளோம்.மதுரை மாவட்டத்தில் ,சுமார் 1500 டிப்பர் லாரிகள் மற்றும் 2500 டிரைவர்கள் குடும்பங்கள் மிக சிரமத்திற்கு உள்ளாகி, மேற்படி குவாரிகள் செயல்பட உதவி செய்யுமாறும் எங்கள் வாழ்வாதாரத்தை காக்க வேண்டி கேட்டுக் கொள்கிறோம் எனக் கோரி, டிப்பர் லாரி உரிமையாளர் சங்கத்தினர், மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க திரண்டு வந்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

உதவிக்கரம் நீட்டுங்கள்..