நிலக்கோட்டையில் 29 ஆண்டுகளுக்குப் பின்பு இறந்த நண்பர் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கிய நண்பர்கள்

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை நடராஜபுரத்தைச் சேர்ந்த கார்த்தி வயது 46. இவர் நிலக்கோட்டையில் டீக்கடை நடத்தி வந்தார். இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்து போனார். இவருடன் கடந்த 1992ஆம் ஆண்டு மதுரை மாவட்டம், காரியாபட்டியில் உள்ள ராமு சீதா பாலிடெக்னிக் கல்லூரியில் படித்த நண்பர்கள் தனது நண்பர் கார்த்தி இளமையிலேயே திடீரென மாரடைப்பால் இறந்ததால் அவரது குடும்பத்திற்கு மதுரை முன்னாள் மாணவர்கள் குடும்பநல நிதி மூலம் நிலக்கோட்டையில் வசிக்கும் கார்த்திக் குடும்பத்தினரிடம் ரூபாய் ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 500 ரூபாயை நண்பர்கள் மூலமாக குடும்பம் தலைவனை திடீரென இழந்த தன்னந்தனியாக வாழ்ந்த வரும் அந்த குடும்பத்திற்கு நண்பர்களாக ஒன்றுசேர்ந்து சேகரித்து வழங்கினார்கள். இதைப் பார்க்கும்போது கடந்த 29 ஆண்டுகளுக்குப் பிறகு நட்பிற்கு இலக்கணமாக நண்பர்கள் அனைவரும் சேர்ந்து இன்றைக்கு நண்பர் குடும்பத்திற்கு நிதி உதவி சிறுகச்சிறுக சேகரித்து வழங்கிய சம்பவம் இப்பகுதியில் மிகுந்த பாராட்டையும் , மனிதநேயத்தையும்  வரவேற்கும் வகையில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா