ஆர்.எஸ்.எஸ் தேசிய தலைவர் மோகன் பகவத் வருகையையொட்டி மதுரை விமான நிலையத்தில் இருந்து அவர் செல்லும் டிவிஎஸ் நகர் வரை போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர் .

இசட் பிரிவு பாதுகாப்பில் உள்ள ஆர் எஸ் எஸ் தேசிய தலைவர் மோகன் பகவத் வருகையை முன்னிட்டுமதுரை காவல் துணை ஆணையர் (சட்டம் ஒழுங்கு )தங்கதுரை தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் .மேலும் மதுரை விமான நிலையத்தை சுற்றிலும் மோப்பநாய் கொண்டு சோதனை செய்யப்பட்டு வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மூலம் வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டு பின்னர் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

உதவிக்கரம் நீட்டுங்கள்..