Home செய்திகள் நிலக்கோட்டை அருகே தவயோகி ஞானதேவபாரதி சுவாமிகள் மடத்தில் புலித்தோல் இருந்ததை தகவலறிந்து வனத்துறையினர் பறிமுதல்.

நிலக்கோட்டை அருகே தவயோகி ஞானதேவபாரதி சுவாமிகள் மடத்தில் புலித்தோல் இருந்ததை தகவலறிந்து வனத்துறையினர் பறிமுதல்.

by mohan

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே. வீலி நாயக்கன்பட்டி. கிராமத்திலுள்ள தவயோகி ஸ்ரீ ஞான தேவ பாரதி சுவாமிகள் மடம் உள்ளது அங்கு உள்ள தவயோகி நீரில் அமர்ந்து தவம் செய்து வருகிறார் என்று கூறப்படுகிறது. சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள பக்தர்கள் அவரிடம் சென்று அருள்வாக்கு பெற்று செல்கின்றனர். என்று கூறப்படுகிறது. மடத்திற்குள் புலித்தோல் உள்ளதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் அடிப்படையில் மாவட்ட வன அலுவலர் திலீப் உத்தரவின்பேரில் வத்தலகுண்டு வன சரக அலுவலர் ஆறுமுகம் அவர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வனத்துறை அதிகாரிகள் அந்த மடத்திற்குள் சென்று தீவிர சோதனையில் ஈடுபட்ட போது தனியாக மடத்திற்குள் ஒரு வீடு உள்ளது. அந்த வீட்டிற்குள் சோதனை செய்தபோது அந்த வீட்டிற்குள் பீரோவின் மேல் புலித்தோல், புள்ளி மான் தோல், மயில் தோகைகள் மற்றும் கருங்காலிக் கட்டை இருந்ததை வனத்துறையினர் கண்டுபிடித்தனர். இவைகள் அனைத்தையும் பறிமுதல் செய்தனர். பின்னர் மடத்தில் உள்ளவரிடம் விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி அவரது மனைவி அருள்மணி மற்றும் அவர்களது பெண் குழந்தை இந்த மடத்திற்கு சேவை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களுக்கு என்று மடத்திற்குள் தனி வீடு ஒன்று இருப்பதாக தெரியவந்தது. அந்த வீட்டிற்குள் இருந்து தான் புலித்தோல், புள்ளி மான் தோல், மயில் தொகைகள் மற்றும் கருங்காலி கட்டை இவை அனைத்தையும் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.பின்னர் வனத்துறையினர் பாலசுப்பிரமணியிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆசிரமத்தை நடத்தி வந்த தவயோகி ஞானதேவபாரதி திடீரென தலைமறைவாகி விட்டதால் இதுகுறித்து அத்தனை கொண்டு வனச்சரக வனத்துறை அதிகாரி ஆறுமுகம் தலைமையில் புலித்தோல் மற்றும் மான்தோல் உள்ளிட்ட பொருள்கள் உண்மையானதா என சோதிக்க உயர்மட்ட புள்ளிகள் அதிகாரிகள் ஆய்வு செய்ய உத்தரவிட்டு இருப்பதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!