Home செய்திகள் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய கவுன்சில் கூட்டத்தில் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் ரத்து செய்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்

நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய கவுன்சில் கூட்டத்தில் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் ரத்து செய்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்

by mohan

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர்கான ஆலோசனைக் கூட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் ரெஜினா நாயகம் தலைமையில் நடைபெற்றது. நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவர் யாகப்பன், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் லாரன்ஸ் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் திமுக ஒன்றிய கவுன்சிலர் மாயன் என்ற அறிவழகன் பேசியதாவது: தேனி மாவட்டம், முல்லை பெரியார் அணையில் இருந்து தற்போது புதிய நேரடியாக மதுரை மாவட்டத்திற்கு அரசின் சார்பாக அமைக்கப்பட்டுவரும் குடிநீர் குழாய் பணியில் நிலக்கோட்டை ஒன்றியத்திற்கு குடிநீருக்காக தனியாக புதிதாக கிளை குடிநீர் குழாய் பதித்து தண்ணீர் வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் யாகப்பன் : இது சம்பந்தமாக உடனடியாக அனைத்து கவுன்சிலர் ஒப்புதலுடன் தீர்மானம் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் விவசாயிகளின் உடைய கோரிக்கையை ஏற்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூட்டுறவு வங்கிகளில் பயிர் கடன் மூலமாக கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் கடன் ரத்து என்று அறிவிக்கப்பட்டதை இந்தக் கூட்டத்தில் வரவேற்று நன்றி தீர்மானம் நிறைவேற்றப்படும் என நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் ரெஜினா நாயகம் தெரிவித்ததை தொடர்ந்து அனைத்து கவுன்சிலரும் வரவேற்று நன்றி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது,. ஒன்றிய கவுன்சிலர் கணேசன் : நூத்துலாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள எஸ். தும்பலப்பட்டி முருகன் கோவில், காளியம்மன் கோயில், முத்தாலம்மன் கோவில் பகுதிகளில் சிமெண்டு சாலை அமைக்கவும் ராஜீவ் நகரில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து பொது மக்களுக்குத் தண்ணீர் வழங்கவும், சிமெண்ட் சாலை அமைக்கவும் மனு கொடுத்தார்.வட்டார வளர்ச்சி ஆணையாளர் லாரன்ஸ் பேசியதாவது: நிலக்கோட்டை ஒன்றியத்தை பொருத்தவரை சாக்கடை அமைத்தல், மின் விளக்குகள், நவீன கட்டிடங்கள் பராமரித்தல் உள்ளிட்ட பணிகள் செய்து மாநில அரசு சார்பாக 1கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு இருப்பதால் அதற்கான அடிப்படை பணிகளை தேர்வு செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது என தெரிவித்தார்.

ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் யாகப்பன் பேசியதாவது: தேவகோட்டை ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஒன்றிய கவுன்சிலர்கள் சமமாகப் பணிகள் தேர்வு செய்யப்பட்டு உடனடியாக தீர்மானம் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார். இக்கூட்டத்தில் ஊராட்சிஒன்றிய மேலாளர் பாலகிருஷ்ணன், மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள், அலுவலகப் பணியாளர்கள் அனைத்து துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!