
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வாரச்சந்தை ஒட்டி தமிழக அரசு வேளாண்மை துறை சார்பாக ஒரு கோடியே 70 லட்சம் மதிப்பில் ஒருங்கிணைந்த வேளாண்மைத் துறை சார்ந்த கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடம் கடந்த ஓராண்டுக்கு மேலாக அவ்வபோது கிடப்பில் போடப்பட்டு எந்தவிதமான பாதுகாப்பும் இன்றி கட்டிடம் கட்டப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு அங்கு சமையல் வேலை செய்த குளத்துப்பட்டியைச் சேர்ந்த காமாட்சி என்ற பெண்மணி கரண்ட் அடித்து மயிரிழையில் உயிர் தப்பினார். இந்நிலையில் நேற்று முறையாக எந்தவிதமான பாதுகாப்பும் இன்றி கம்பத்தில் ஏறி 4 கொத்தனார், 10 சித்தாள், 6 க்கும் மேற்பட்ட மண் வெட்டி வேலை செய்யும் நபர்கள் உள்பட சுமார் 20 க்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் மாலை சுமார் 5 மணி அளவில் சாரத்தில் கொத்தனார் வேலை செய்து கொண்டிருந்தபோது சாரம் ஓடிந்து விழுந்ததில் செங்கோட்டையை சேர்ந்த சக்தி வயது 33, கோடாங்கிநாயக்கன்பட்டி சேர்ந்த கண்ணன் வயது 37. ஆகிய 2 பேருக்கு பலத்த காயத்துடன் நிலக்கோட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரையில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்கள். மேலும் உடன் வேலை செய்த சித்தாள் பெண்மணிகளுக்கு சிலருக்கும் சிறு சிறு காயங்கள் ஏற்பட்டு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். இதுகுறித்து நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார். அரசு கட்டிடத்தில் பாதுகாப்பற்ற முறையில் வேலை செய்த இரண்டு நபர்களுக்கு பலத்த காயமடைந்த சம்பவம் நிலக்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா
You must be logged in to post a comment.