நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் அலுவலகம் முன்பு சங்க கொடியேற்றும் விழா.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பாக சங்க கொடியேற்று நிகழ்ச்சியும் , கல்வெட்டு துவக்க திறப்பு விழாவும் நடைபெற்றது. விழாவிற்கு சங்க மாவட்ட தலைவர் பாண்டியராஜன் தலைமை தாங்கினார். மண்டலத் தலைவர் குமரேசன் வரவேற்று பேசினார். தமிழ்நாடு அனைத்து பணியாளர் சங்க மாநில தலைவர் சார்லஸ் ரெங்கசாமி கல்வெட்டை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க மாநிலத் தலைவர் ஜான் போஸ்கோ பிரகாஷ் சங்க கொடியை ஏற்றி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் முருகன், மாவட்ட துணைச் செயலாளர் பொன்னுச்சாமி, மாநில நிர்வாகிகள் விஜயகர்ணபாண்டியன் , தண்டபாணி, மாவட்ட நிர்வாகிகள் ஆறுமுகம் ,ராமநாதன் ,கந்தசாமி சாந்தி , மாவட்ட, மாநில, ஒன்றிய , வட்டார நிர்வாகிகள், தூய்மை காவலர்கள் உள்பட உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா