
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே எத்திலோடு ஊராட்சி ,கொங்கபட்டி முத்தாலம்மன் கோவில் முன்பு உள்ள நாடக மேடையில் அங்குள்ள இளைஞர்களும் முதியவர்களும் இரவு நேரத்தில் தூங்குவது வழக்கம். அவ்வாறு நேற்று இரவு தூங்கிக் கொண்டிருந்த சத்தம் கேட்டு எழுந்தவர்கள் நாடக மேடை அருகே 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு இங்கும் அங்குமாக சுற்றி இருப்பதை சுற்றிக் திரிவதை பார்த்தனர். நிலக்கோட்டை தீயணைப்பு துறையினருக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர். தகவலறிந்த தீயணைப்பு நிலைய அலுவலர் ( பொறுப்பு) பிரகாஷ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று அங்கிருந்த 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்து வனக்காவலர் அய்யனாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் விளாம்பட்டி போலீஸ் தலைமை போலீசார் அண்ணாதுரை மற்றும் குழுவினர் சேர்ந்து அங்குள்ள சித்த மலை என அழைக்கப்படும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உயிருடன் விட்டு வந்தனர். இது குறித்து கிராம பொதுமக்கள் இவ்வளவு மிகப்பெரிய மலைப் பாம்பு எப்படி உயிருடன் ஊருக்குள் வந்தது என வியப்பாக பார்த்தனர் . கிராம மக்கள் இதுபோன்ற மலைப்பாம்புகள் நிறைய இருக்கிறதா? என பயத்தில் உள்ளார்கள்.
நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா
You must be logged in to post a comment.