Home செய்திகள் தமிழகத்தில் மாநில அரசு ஜி.எஸ்.டி வரியை பெட்ரோலுக்கு விதிக்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி மாநில பொதுச்செயலாளர் கேள்விக்கு பதில்.

தமிழகத்தில் மாநில அரசு ஜி.எஸ்.டி வரியை பெட்ரோலுக்கு விதிக்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி மாநில பொதுச்செயலாளர் கேள்விக்கு பதில்.

by mohan

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பேரூராட்சி பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மஹாலில் பாரதிய ஜனதா கட்சியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் நிர்வாகிகளும், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும் இணையும் விழா தமிழகத்தின் பாரதிய ஜனதா கட்சி பொதுச் செயலாளர் ராமசீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. அப்போது பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ராமசீனிவாசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: தமிழகத்தில் தி. மு. க. கட்சி சார்ந்த கிராம சபை கூட்டம் தி.மு.க.ஆட்சியில் இருந்தபோது ஏன் தனியாக கிராமசபை கூட்டம் நடத்தவில்லை எனவும், நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் தி. மு. க . தனிப்பெரும்பான்மை நிரூபிக்க தயாராக இருக்கிறதா? என்பதையும் கேள்வியாக எழுப்பினார். தற்போது உலகம் முழுக்க ஏற்பட்டுள்ள  கொரானா நோயின் தாக்கத்தால் பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையே தற்போது கொரானா நோய் தடுப்பூசி போட மத்திய அரசும் , உலக சுகாதாரமும் இணைந்து உத்தரவிட்டுள்ள நிலையை உணர்ந்து தமிழகத்தின் மருத்துவத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தானாக முன்வந்து தடுப்பூசி போட்டுள்ளார். அதேபோன்று பாரதிய ஜனதா கட்சியில் உள்ள அனைவரும் தாமாக முன்வந்து தடுப்பூசியை போட்டுக் கொள்ள தயாராக இருக்கிறோம் என்பதை இந்தத் தருணத்தில் தெரிவிக்கிறேன். தற்போது தமிழகத்தில் பால்.தினகரன் வீட்டில் நடந்த வருமான வரி சோதனை என்பது அரசினுடைய கடமையாக உள்ளது. அதனை எந்த வகையிலும் மத்திய அரசையும் , மாநில அரசையும் குறை கூற வேண்டிய அவசியம் இல்லை பால் தினகரன் நிரபராதியாக இருந்தால் முறையாக நீதிமன்றத்தை சந்தித்து நீதியைப் பெற வேண்டும் என இந்த தருணத்தில் கூறுகிறேன். திண்டுக்கல் மாவட்டத்தை பொருத்தவரை அதுவும் திண்டுக்கல் கிழக்கு மாவட்டத்தைப் பொருத்தவரை 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இதில் யார் வேண்டுமென்றாலும் பி.ஜே.பி சேர்ந்தவர்கள் போட்டியிடுவார்கள். அந்த வேட்பாளர்கள் நிச்சயமாக மக்களின் ஆதரவோடு வெற்றி பெறுவார்கள் என்பதில் எந்தவிதமான அச்சமும் இல்லை. தமிழகத்தில் நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தொகுதி தேர்தலில் நிச்சயமாக பாரதிய ஜனதா கட்சியின் பங்கு இரட்டை எண்களில் இடம் பெற்று சட்டசபையில் இடம் பெறுவார்கள் என்பதில் துளியளவும் ஐயம் இல்லை எனவும், நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலிலும் திமுக தலைவர் மு க ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தான் போட்டியிடுவார். அதற்காக உலகத்தில் திமுகவினர் பல்வேறு நாடகங்களை நடத்தி வருகிறார்கள். தமிழகத்தில் திமுக சார்பாக நடத்தப்படும் கிராமசபை கூட்டங்களில் பொதுமக்களிடமிருந்து வாங்க பெற்ற ஒரு மனுக்கள் கூட தமிழக அரசுக்கு தெரிவிக்கப்படவில்லை என தமிழகத்தின் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஏற்கனவே தெரிவித்துள்ளார் . இதற்கு மு.க. ஸ்டாலின் பதில் சொல்லி ஆக வேண்டும். அதே போன்று இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஏராளமான தமிழர்கள் மீன்பிடிக்கச் செல்லும்போது இலங்கை ராணுவத்தால் அதிக அளவு கொல்லப்பட்டு வந்தனர். ஆனால் தற்போது இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்று ஆட்சி காலத்தில்  இலங்கையில் சொல்லக்கூடிய அளவுக்கு தமிழர்கள் கொல்லப்படவில்லை என தெரிவித்தார். ஆனால் கசப்பான சம்பவம் ஓரிரு நாட்களுக்கு முன்பு நடந்த மீனவர்கள் மீது இலங்கை ராணுவம் கொல்லப்பட்ட உண்மை என்றாலும் இதனை உடனடியாக பாரதிய ஜனதா கட்சி சார்பாகவும் கடுமையாக கண்டிக்கிறோம் என தெரிவித்தார்.உலகில் எங்கிருந்தாலும் யார் செய்தாலும் நரேந்திரமோடி ஒத்துழைக்க மாட்டார் எதிர்ப்பு தெரிவிப்பார் அதற்கான நடவடிக்கையை மேற்கொள்வார் என தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்த வரை நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் 7 இடங்களில் 3 இடங்களிலும் போட்டியிடுவோம் என தெரிவித்தார். நாங்கள் கடந்த 4 மாதங்களாகவே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி விட்டோம். எங்களுடைய கட்சியின் வலுவான கூட்டணியாக உள்ள அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கட்சி தலைமை ஏற்கனவே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி விட்டது. இந்த தேர்தல் பிரச்சாரத்தில் அதிகளவு மக்கள் தொகை மக்கள் கூடி அதிமுக அரசுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மக்கள் மத்தியில் ஆதரவு இருக்கிறது. வருகிற சட்டமன்ற தேர்தலில் நிச்சயமாக அ.தி.மு.க கூட்டணி தான் வெற்றி பெறும். ஏற்கனவே மதுரையில் வந்த மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து விரைவில் கட்ட நடவடிக்கை எடுக்கவும், நிச்சயமாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் , தமிழகத்தில் பெட்ரோல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதற்கு ஜிஎஸ்டி வரியை அமல்படுத்த காரணத்தால்  தான் பெட்ரோல் விலை அதிகரிக்கிறது என தெரிவித்தார்.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!