Home செய்திகள் ரோட்டரி மாவட்டம் 3000
புதிய நிர்வாகிகள் அறிமுக விழா.

ரோட்டரி மாவட்டம் 3000
புதிய நிர்வாகிகள் அறிமுக விழா.

by mohan

ரோட்டரி மாவட்டம் 3000 2021-2022 ஆம் ஆண்டிற்க்கான ஆளுநர் Dr.R .ஜெயக்கண் தலைமையிலான புதிய நிர்வாகிகள் அறிமுக விழா மதுரையில் உள்ள தி கோர்ட்யார்டு மாரியாட் ஹோட்டலில் நடைபெற்றது.சிறப்பு விருந்தினர்களாக ரோட்டரியின் பன்னாட்டு முன்னாள் இயக்குநர் சி.பாஸ்கர் அவர்கள் ,2019-20-ஆம் ஆண்டின் ஆளுநர் டாக்டர் A.ஜமீர் பாட்சா ,ஆளுநர் A.L.சொக்கலிங்கம் ,2023-24-ம் ஆண்டின் ஆளுநர் ஆனந்த ஜோதி ஆகியோர் பங்கேற்றனர்.ரோட்டரி மாவட்டத்தின் 2021-22-ஆம் ஆண்டின் ஆளுநரான .ஜெயக்கண் புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி சிறப்புரையாற்றினார்.ரோட்டரியின் பன்னாட்டு முன்னாள் இயக்குநர் சி.பாஸ்கர் .ஜெயக்கண் மற்றும் அவரது துணைவி மாவட்டத்தின் முதல் பெண்மணி வசந்தி ஜெயக்கண் அவர்கள் நினைவு பரிசு வழங்கினர். மாவட்டத்தின் நிர்வாக பொதுச்செயலாளர் M.A.முருகப்பன் , விஸ்வ நாராயணன் C .வினோதன், மகேஷ் ராஜா மற்றும் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு நன்றியுரையாற்றினர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com