பாஜக சார்பில் திரைப்பட தயாரிப்பாளரும் இயக்குனருமான பேரரசு தலைமையில் நம்ம ஊரு பொங்கல் விழா நடைபெற்றது.

தமிழக பாஜக அறிவிப்பின்படி கிராமங்கள் தோறும் நம்ம ஊரு பொங்கல் விழா நடைபெற்று வருகிறது அதனையொட்டி இன்று திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு நகரப்பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் வளாகத்தில் பாஜக-வின் மாநில கலை இலக்கிய கலாச்சாரப் பிரிவு மாநில தலைவரும் திரைப்பட தயாரிப்பாளரும் இயக்குனருமான பேரரசு தலைமையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது அப்போது பொங்கல் நிகழ்ச்சியை பொங்கள் பானைக்கு சூடமேற்றி தொடங்கி வைத்தார் அதன்பின் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கல் வைத்தனர் அதனை தொடர்ந்து சிறுவர் பெண்களுக்கான ஓட்டப்போட்டி, மியூசிக்கல்சேர், தவளைப் போட்டி போன்ற விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது பொங்கல் விழா போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது . இந்நிகழ்ச்சியில் பாஜக-வைச் சேர்ந்த மாநில பொறுப்பாளர்கள் மாவட்ட பொறுப்பாளர்கள் என ஏராளமான பாஜக நிர்வாகிகளும் பொதுமக்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.