Home செய்திகள் நிலக்கோட்டை பேரூராட்சிக்கு சொந்தமான 60 கோடி மதிப்பிலான பூங்காக்கள் மீட்பு

நிலக்கோட்டை பேரூராட்சிக்கு சொந்தமான 60 கோடி மதிப்பிலான பூங்காக்கள் மீட்பு

by mohan

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பேரூராட்சியில் கடந்த பல ஆண்டுகளாக பேரூராட்சிக்கு சொந்தமான பூங்காக்களை தனியார்கள் சிலர் அரசுக்குத் தெரியாமல் பல்வேறு வகைகள் ஆக்கிரமிப்பு செய்து வந்தார்கள். இதுகுறித்து புகார் பேரூராட்சி நிர்வாகத்திற்கும், திண்டுக்கல் உதவி இயக்குனர் அலுவலகத்திற்கும் , மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் வந்தவண்ணம் இருந்தது. இதுகுறித்து நிலக்கோட்டை பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் புதிதாக உருவாக்கப்பட்ட பிளாட்டுகள் மற்றும் பழைய பூங்காக்களுக்கு என ஒதுக்கப்பட்ட இடங்களை நிலக்கோட்டை பேரூராட்சி அதிகாரிகள் முழுமையாக ஆய்வு செய்து  கண்டுபிடித்தனர். இந்த இடத்தை  மாவட்ட பேரூராட்சிகள் உதவி இயக்குனர் ராஜா தலைமையில் நிலக்கோட்டை பேரூராட்சிக்குட்பட்ட மெகா சிட்டி, நாகல் நகர் வேல் மாரி நகர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று ஆய்வு செய்து பூங்காக்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை முழுமையாக மீட்டு அப்பகுதிகளில் மரக்கன்று நட்டனர். மேலும் இது குறித்து நிலக்கோட்டை பேரூராட்சி செயல் அலுவலர் பொறுப்பு கலையரசி கூறியதாவது: நிலக்கோட்டை பேரூராட்சியில் பல ஆண்டு காலமாக பேரூராட்சிக்கு ஒதுக்கப்பட்ட   பூங்காக்களுக்கு என இடங்களை ஆக்கிரமிப்பாளர்கள் ஆக்கிரமிப்பு செய்ததாக வந்த புகாரின் அடிப்படையில் தற்போது சுமார் 60 க்கும் மேற்பட்ட இடங்களை கண்டுபிடித்து மேற்கொள்ளும் இதன் காரணமாக பேரூராட்சிக்கு சொந்தமான சுமார் 60 கோடி மதிப்புக்கு மேலான சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். இன்னும் இது போன்று பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்பு உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது அதையும் விரைவில் மீட்போம் என தெரிவித்தார். இந்த ஆய்வின்போது நிலக்கோட்டை பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார் , சுகாதார மேற்பார்வையாளர்கள் கல்யாணி நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com