Home செய்திகள் நிலக்கோட்டையில் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவிக்க சென்ற இளைஞர்களை தடுத்ததால் சாலை மறியல் .

நிலக்கோட்டையில் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவிக்க சென்ற இளைஞர்களை தடுத்ததால் சாலை மறியல் .

by mohan

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள ஆண்டிபட்டி , மிளகாய் பட்டி, சீத்தா புரம் , தொட்டாம்பட்டி, தம்பி நாயக்கன்பட்டி, ஜெய நாயக்கன்பட்டி, சித்தர்கள் நத்தம், கொம்புகாரன்பட்டி, பிள்ளையார்நத்தம், சிறுநாயக்கன் பட்டி, வாலாங்க்கோட்டை , மாலப்பட்டி, பிள்ளையார்நத்தம், எஸ் . தும்மலபட்டி, கோட்டூர், பாப்பி நாயக்கன்பட்டி, வீலிநாயக்கன்பட்டி . அணைப்பட்டி, எத்திலோடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள இளைஞர்கள் நேற்று காலை சுமார் 10.30 மணி அளவில் நிலக்கோட்டையில் சுமார் 50க்கும் மேற்பட்ட வாகனங்களில் திரண்டு ஒரே அணியாக நிலக்கோட்டை – அணைப்பட்டி சாலையிலிருந்து அணிவகுத்து மதுரையில் உள்ள விடுதலை வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த மதுரையை நோக்கி புறப்பட்டனர்.அப்போது நிலக்கோட்டை நால்ரோடு அருகே நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மதுரையை நோக்கி சென்ற இளைஞர்களை மறைத்து மதுரை செல்ல அனுமதி இல்லை எனக் கூறி வாகனத்தை போலீஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்ல முயற்சித்தனர். இதனை அறிந்த வீரபாண்டிய கட்டபொம்மன் கழகத்தினர் அனைத்து வாகனங்களின் அணி வரிசையாக நிறுத்தி திடீரென போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது போலீசுக்கும் இளைஞர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.இந்தநிலை முற்றவே உடனடியாக ஆத்திரத்தில் இளைஞர்கள் அனைவரும் ஆட்டம் பாட்டத்துடன் மிக பயங்கரமான வீடுகளையும் சேர்த்து வெடித்து நிலக்கோட்டை நால்ரோடு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு முருகன் இளைஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இருப்பினும் பேச்சுவார்த்தைக்கு உடன்படாத இளைஞர்கள் கூச்சல் குழப்பம் ஏற்படுத்தியும், பட்டாசு வெடித்தும் என திரளாக சத்தம் போட ஆரம்பித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் உடனடியாக நூத்துலாபுரம் ஊராட்சி மன்ற தலைவரும், வீரபாண்டிய கட்டபொம்மன் கழக நிர்வாகியுமான செல்வராஜை போலீசார் அழைத்து இளைஞர்கள் மத்தியில் பேச்சுவார்த்தை நடத்தினர்.உரிய வகையில் வாகனங்களை எந்தவிதமான தொந்தரவும் இன்றி இயக்கவும் முறையாக அனுமதி பெற்ற வாகனங்களுக்கு மட்டும் அனுமதி கொடுக்கப்படும் என போலீசார் கூறி அதனை அடுத்து வாகனங்கள் மதுரையை நோக்கி அணிவகுத்துச் சென்றனர். நிலக்கோட்டை நால்ரோட்டில் திடீரென்று பட்டாசு வெடித்தும், இளைஞர்கள் ஆட்டம் போட்டு சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் நிலக்கோட்டை பகுதி மக்களை திரளாக வேடிக்கை பார்க்கச் செய்தது. அதுவும் இளைஞர்கள் பட்டாளம் எந்த வாகனங்களும் எடுக்கக்கூடாது என கூச்சலிட்டதால் போலீசார் என்ன செய்வதென்றே தெரியாமல் திணறினார்கள். உடனடியாக போலீசார் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீசாரையும் நிலக்கோட்டை நால்ரோட்டுக்கு வருமாறு வயர்லெஸ் போன் மூலம் அழைப்பு விடுத்தனர். சிறிது நேரத்தில் ஏற்பட்ட இந்த பரபரப்பு நிலக்கோட்டை பொதுமக்கள் மிகப்பெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.நிலக்கோட்டையில் திரண்டு செய்த ஆர்ப்பாட்டமும், சாலை மறியலும் ஒரு போர்க்களம் போன்று அந்த நேரத்தில் அப்பகுதியில் காட்சியளித்தது.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!