Home செய்திகள் நிலக்கோட்டை அருகே அம்மா மினி கிளினிக் துவக்க விழா

நிலக்கோட்டை அருகே அம்மா மினி கிளினிக் துவக்க விழா

by mohan

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கோட்டூர் ஊராட்சி மைக்கேல் பாளையத்தில் தமிழக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பாக முதலமைச்சரின்  அம்மா மினி கிளினிக் துவக்க விழா தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. . விழாவில்  திண்டுக்கல் மாவட்ட மருந்துவ துணை இயக்குனர் நளினி  வரவேற்று பேசினார். விழாவில் நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.தேன்மொழிசேகர், திண்டுக்கல் முன்னாள் மாநகராட்சி  மேயர் மருதராஜ், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ரெஜினா நாயகம், ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் யாகப்பன், ஆகியோர் முன்னிலை வைத்தனர்.. விழாவில் தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசியதாவது: தற்போது தமிழகத்தில்  முதலமைச்சர் துணை மினி கிளினிக் திட்டத்தை தொடங்கி வைத்த திட்டத்தை எதிர்க்கட்சித் தலைவர்கள் பல்வேறு விமர்சனம் செய்து வருகிறார்கள்.  இந்தத் திட்டத்தில் என்ன குறை இருக்கிறது என்பதை உரிய வகையில் பதில் சொல்ல வேண்டும் . தமிழக மக்கள் கடந்த பல மாதங்களாக கொரானா தொற்று நோயால் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்தும், வேலைவாய்ப்பு இல்லாமல் பல்வேறு வகையில் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதை உணர்ந்து  முதல்வர் தமிழக மக்களின் தேவை அறிந்து தைப்பொங்கலுக்கு பொங்கல் பரிசாக ரூ.2500 பரிசுத்தொகையும், பொங்கல் பொருட்கள் வழங்க உத்தரவிட்டார். தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக தான் அதிக அளவில் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளது. அதைப்போன்று நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடித்து மீண்டும் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமியும் , துணை முதல்வராக ஓ .பன்னீர்செல்வம்  என்பதை இந்தத் தருணத்தில் மகிழ்ச்சியாக தெரிவித்துக்கொள்கிறேன் .

இந்நிகழ்ச்சியில் நிலக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லாரன்ஸ், செல்வராஜ் ,  மேற்கு ஒன்றிய செயலாளர் நல்லதம்பி,அம்மையநாயக்கனூர் அதிமுக நகரசெயலாளர் தண்டபாணி , நிலக்கோட்டை  நகர செயலாளர் சேகர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதயகுமார், ஒன்றிய துணை செயலாளர் சீனிவாசன்,  மாவட்ட கவுன்சிலர் ராஜா, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பாலசுப்பிரமணியம், கோட்டூர் ஊராட்சி மன்ற தலைவர்  சுகந்தா, மாவட்ட பிரதிநிதி ஜேசுராஜ், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப குமரேசன், மைக்கேல்பாளையம் கூட்டுறவு சங்கத் தலைவர் ஜோசப், ஊராட்சி மன்ற  தலைவர்கள் நாகேந்திரன் க செல்வராஜ், முனிராஜா, கிழக்கு எம்ஜிஆர் மன்ற  ஒன்றிய  இளைஞரணி  செயலாளர் காட்டுராஜா கோட்டூர் ஊராட்சி மன்ற செயலாளர்கள் பாண்டியராஜன், பொன்னுச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com