Home செய்திகள் நிலக்கோட்டையில் நீட் தேர்வால் பயன்பெற்ற கூலித் தொழிலாளி மகள்

நிலக்கோட்டையில் நீட் தேர்வால் பயன்பெற்ற கூலித் தொழிலாளி மகள்

by mohan

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள குளத்துப்பட்டி ஒரு நூல் தொழிற்சாலையில் கூலித் தொழிலாளியாக வேலை பார்ப்பவர் ரவிச்சந்திரன் வயது 47. இவரது மகள் ஹேமவர்ஷினி வயது 17. இவர் தாராபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பில் 542 மதிப்பெண் பெற்று அதனைத் தொடர்ந்து மத்திய அரசு நடத்திய நீட் தேர்வில் 720க்கு 588 மார்க் மதிப்பெண் பெற்று வெற்றி பெற்றார். இதனைத்தொடர்ந்து முறையாக மருத்துவ கல்லூரியில் இருந்து அழைப்பு ஏற்படுத்தப்பட்டு வருகிற 9. 12 . 2020 க்குள் மதுரை மருத்துவக் கல்லூரியில் சேர்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஒரு மருத்துவக்கல்லூரியில் கூலி தொழிலாளி மகள் ஹேமவர்ஷினி சீட்டு கிடைத்ததை மிகுந்த அளவில் நிலக்கோட்டை பகுதி மக்கள் வரவேற்பளித்து மகிழ்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ஹேமவர்ஷினி தந்தையும் , தாயும் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் நன்றியை தெரிவித்தனர்.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!