தென்காசி மாவட்டத்தில் காவல் நிலையங்களில் அச்சக உரிமையாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி…

தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும், அச்சக உரிமையாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அச்சக உரிமையாளர்களையும் காவல் நிலையம் அழைத்து காவல் அதிகாரிகள் அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.Press and regulations of Books Act 1867 பிரிவு 3 ன் படி அச்சகத்தில் அச்சிடப்படும் அனைத்து புத்தகம்,நாளிதழ், போஸ்டர்ஸ் துண்டு பிரசுரங்கள் மற்றும் இதர வகைகளில் பதிப்பகத்தார் பெயர் இடம் மற்றும் கைபேசி எண் மேலும் பதிப்பகத்தாரின் விபரங்களுடன் அச்சிடப்பட வேண்டும்.பிரிவு 4-ன் படி மேற்படி சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள படிவத்தின் படி பதிப்பக உரிமையாளர் பதிவு செய்யும் அரசு அதிகாரி முன் உறுதியுரை அளிக்காமல் எவரும் பதிப்பகம் நடத்தக் கூடாது. பிரிவு 12 ன் படி பிரிவு நூலில் கூறப்பட்டுள்ள வரைமுறைகள் மீறப்படும் ரூபாய் 2000 வரை அவருடன் 6 மாதங்கள் வரை சிறை தண்டனை விதிக்கலாம்.தமிழ்நாடு திறந்தவெளி அழகு குலைத்தல் தடுப்பு சட்டம் 1959 பிரிவு 34 படி ஆட்சேபகரமான மற்றும் உரிய அனுமதியின்றி விளம்பர பலகைகள் மற்றும் நோட்டீஸ் ஒட்டுவது மேற்படி சட்டப்படி தண்டிக்கதக்க குற்றங்களாகும்.மாவட்ட காவல் எல்லைக்குள் அனாமதேய அறிவிப்புகள் அல்லது பதிப்புகள் ஏதேனும் ஒட்டப்பட்டாலோ அல்லது அச்சிடப்பட்டாலோ பதிப்பகத்தார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மாநகராட்சியின் உரிய அனுமதி பெற்றுதான் நோட்டீஸ் அல்லது விளம்பர பலகைகள் நிறுவப்பட வேண்டும்.மாவட்ட காவல் எல்லைக்குள் உரிய அனுமதியின்றி ஏதேனும் அறிவிப்பு ஆவணம் போன்றவற்றை ஏதேனும் கட்டிடம், சிறைகள்,மரங்கள், சுவர்களில் எழுதினாலும் ஒட்டினாலும் மாநகர காவல் சட்டம் 1888 பிரிவு 71 ன் படி அபராதத்துடன் மூன்று மாதங்கள் வரை நீடிக்கக்கூடிய சிறை தண்டனை விதிக்கப்படக் கூடிய குற்றமாகும்.எந்த ஒரு அரசியல் கட்சி சார்பாகவோ,அமைப்பு சார்பாகவோ,மதம் சார்பாகவோ மற்றும் ஜாதி சார்பாகவோ தவறான அல்லது உண்மைக்குப் புறம்பான செய்திகளை அச்சிடவோ வெளியிடவோ கூடாது..எந்த ஒரு அச்சு பதிவும் முறையான அடையாள அட்டை வைத்திருக்கும் நபர்கள் மூலமே பெற்று அச்சிடப்பட வேண்டும். அரசியல் ரீதியாகவோ மதம் ரீதியாகவோ சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை ஏற்படுத்த கூடிய சுவரொட்டிகள் விளம்பரங்கள் மற்றும் பதாகைகள் ஆகியவற்றை அச்சிடக் கூடாது. மேற்படி விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்காத அச்சகங்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்