கீழக்கரையில் திமுக சார்பாக நிலவேம்பு கசாயம் வினியோகம்..

கீழக்கரையில் நிலவி வரும் சுகாதார சீர்கேடு மற்றும் பல வகையான காய்ச்சலை கருத்தில் கொண்டு அரசாங்கம் மற்றும் தனியார் சமூக தல அமைப்புகள் பொதுமக்களுக்கு நில வேம்பு கசாயம் வழங்கி வருகிறது.

இதன் தொடர்ச்சியாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தலை தொடர்ந்து கீழக்கரை நகர் தி.மு.க.கட்சி சார்பாக பொது மக்களுக்கு வள்ளல் சீதக்காதி  சாலை செக்கடி அருகே  நில வேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

கீழக்கரை நகர் திமுக நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தகவல்: மக்கள் டீம்