நிலக்கோட்டை வட்டாட்சியரை பற்றி சமூக வலைத்தளங்களில் தவறாக சித்தரிக்க முயற்சி.? உண்மையிலேயே நடந்தது என்ன! கள ஆய்வில் “கீழை நியூஸ்”
நிலக்கோட்டையில் வட்டாட்சியராக தனுஷ்கோடி பொறுப்பேற்றதிலிருந்து இவரது பணிகளை மேல்மட்ட அதிகாரிகள், பொதுமக்கள், அனைத்து கட்சியினர், சமூக ஆர்வலர்கள், என ஒரு மனதாக பாராட்டி வரும் சூழ்நிலையில் கடந்த ஒரு சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் இவரைப் பற்றிய சில விஷயங்கள் பரப்பப்பட்டு வருகிறது.
அது ஏன்.? எப்படி.? எதற்காக.? என
கள ஆய்வில் “கீழை நியூஸ்” இறங்கியபோது கிடைத்த தகவல்களை சுருக்கமாக பார்ப்போம்;
நிலக்கோட்டை தாலுகா விராலிப்படி கிராமத்தில் புல எண் 380/1 மற்றும் 380/2ல் ஆதிதிராவிடர் நல வட்டாட்சியரது குறிப்பானை எண் 13/97-98, நாள் 20.03.1998 ன்படி ஆதிதிராவிடர் இன மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கும் நோக்கத்துடன் நில ஆர்ஜிதம் செய்யப்பட்டு இலவச வீட்டு மனை பட்டா 2000ம் ஆண்டு 102 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. அதன் பின்னர் வெளியூரில் சிலர் வசித்து வருவதாக புகார் வந்ததை அடுத்து,உரிய விசாரணை செய்து 2014 ம் வருடம் 17 நபர்களின் பட்டாக்கள் ரத்து செய்யப்பட்டது.
ரத்து செய்யப்பட்ட அதே இடத்திற்கு மீண்டும் புதிய பயனாளிகளாக 17 பேருக்கு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பாக பட்டா வழங்கப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடர் நலத்துறையால் வழங்கப்பட்ட இந்த இடத்திற்கும் நிலக்கோட்டை வட்டாட்சியர் தனுஷ்கோடி க்கும் எவ்விதமான சம்பந்தமும் இல்லாத சூழ்நிலையில்.
சில தினங்களுக்கு முன்பு நிலக்கோட்டை தாலுகா விராலிப்படி கிராமத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை மூலமாக தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ஒதுக்கீடு செய்து பட்டா வழங்கப்பட்ட இடத்தில் இடம் அளவீடு சம்பந்தமாக பட்டாதாரர்களிடையே பிரச்சினைகள் ஏற்படுகிறது.
அது சமயம் வட்டாட்சியர் எலெக்ஷன் ட்ரைனிங் சம்பந்தமாக மதுரையில் இருந்துள்ளார்.
அப்போது சிலர் வட்டாட்சியருக்கு கைபேசி மூலம் அழைப்பு விடுத்துள்ளனர்.
நான் தற்போது எலெக்ஷன் ட்ரைனிங் சம்பந்தமாக மதுரையில் உள்ளேன் எனவும் இது ஆதிதிராவிடர் நலத்துறை சம்பந்தப்பட்ட விஷயம் எனவும் தெளிவுபட கூறியுள்ளார்.
அதன் பின்னர் இந்த நிலம் சம்பந்தமாக ஏற்கனவே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நில உரிமை மீட்பு இயக்க மாநில துணை செயலாளர் உலக நம்பி என்பவர் வட்டாட்சியர் இடத்தில் பேசியிருந்த காரணத்தால்,
அதனடிப்படையில் வட்டாட்சியர் உலகநம்பியை அழைத்து அங்கு என்ன பிரச்சினை என கேட்டுள்ளார் இவ்வளவு தான் நடந்துள்ளது.
அதன் பின்னர் என்ன நடந்தது.? நடக்கிறது.? என்பது கூட அறிய முடியாமல் வட்டாட்சியர் சம்பந்தமாக அவரது நற்செயல்கள்களுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து அவதூறான செய்திகளை சிலர் பரப்பி வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக “கீழை நியூஸ்” வட்டாட்சியரை தொடர்பு கொண்டு தங்கள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கு நீங்கள் என்ன கூறுகிறீர்கள் என கேட்டபோது அவர் கூறியதாவது,
நான் பொறுப்பேற்றதிலிருந்து எப்படி செயல்படுகிறேன் எது மாதிரியான பிரச்சினைகளை தீர்த்து வைத்துள்ளேன் போன்ற அனைத்து விஷயங்களும் எனது மேலதிகாரிகளும் பொதுமக்களும் நன்கு அறிவார்கள்.
விராலிப்படி விஷயங்கள் நடக்கும்போது நான் 5 நாட்கள் மதுரையில் எலெக்ஷன் ட்ரைனிங் போய் இருந்தேன்.
ஆகையால் தான் நான் என்னை அழைத்து பேசும் போது என்னுடைய விளக்கத்தை சரியான முறையில் சொல்ல முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது.
மிகவும் சரியாக செயல்பட்டு வரும் என் மீது அபாண்டமான இல்லாத ஒரு குற்றச்சாட்டை சுமத்தி சமூக வலைத்தளங்களில் பரப்பியது எனக்கு மிகவும் மன அழுத்தத்தையும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி உள்ளது.
வேறு ஏதோ காரணங்களுக்காக என் மீது வீண் பழி சுமத்தி சமூக வலைத்தளங்களில் பதிவிடும் நபர்கள் முதலில் நன்றாக விசாரியுங்கள் அதன் பிறகு பதிவிடுங்கள் என முடித்துக் கொண்டார்.
You must be logged in to post a comment.