Home செய்திகள் இஸ்லாமிய சிம்மாசனங்கள்…!

இஸ்லாமிய சிம்மாசனங்கள்…!

by Askar

பகுதி -1

இஸ்லாமிய சிம்மாசனங்கள்…!

பகுதி -1

கப்ளிசேட்

உமைய்யாக்களின் பேரரசு-9
(கி.பி 661-750)

அதுவரை அமைதியாக இருந்த சைப்ரஸ் துறைமுகம் திடீரென விழித்துக்கொண்டது.

தூரத்தில் முஸ்லீம்களின் கப்பல்களின் உச்சியில் பறந்த உமைய்யா பேரரசின் கொடியை பார்த்தவுடன் கப்பல்களின் எண்ணிக்கையை இரவின் வெளிச்சப் புள்ளிகள் உணர்த்தியவுடன் சைப்ரஸ் தளபதிக்கு செய்திகள் பறந்தது.

உடனடியாக துறைமுகத்திற்கு வந்த சைப்ரஸ் தளபதி துறைமுகத்தின் பல விளக்குகளை அணைக்க சொல்லி
துறைமுகம் உறங்குவது போல் காட்டி முஸ்லீம் கப்பல்கள் உள்நுழைந்தவுடன் தனது போரை துவக்க வியூகம் வகுத்து இருந்தான்.

ஆனால் முஸ்லீம்களின் சில கப்பல்கள் மட்டும் துறைமுகத்தின் நடுப்பகுதியில் நுழைந்ததும் மற்ற கப்பல்கள் இரண்டுபுறமாக பிரிந்து ஒன்று முன்னால் ஒன்று பின்னால் என்று மேலும் கீழுமாக கப்பல்கள் அணிவகுப்பதை கண்டு சைப்ரஸ் தளபதி குழம்பிப் போனான்.

தனது வியூகத்தை மாற்றிகொண்ட சைப்ரஸ் தளபதி, தனது கப்பல்களை
இருபுறமும் பிரிந்து இருபுறமும் தாக்கவும்,
நடுவில் நுழைந்த முஸ்லீம்களின் கப்பல்களில் இருந்து தரையில் இறங்கும் முஸ்லீம் வீரர்களை சைப்ரசின் தரைப்படை வீரர்களைகொண்டு தாக்கவும் ஏற்பாடு செய்தான்.

இருபுறமும் சென்ற சைப்ரஸ் கப்பல்கள், முஸ்லீம்களின் முன் பின் அணிவகுப்பு கப்பல்களை சமாளிக்க முடியாமல் திணறின.

முஸ்லீம்களின் முன் கப்பலிலிருந்து
நெருப்புகள் பொறியிலிருந்து பறந்துவர அதனை
அணைப்பதற்குள்
பின் கப்பலிலிருந்து
நெருப்பு பொறிகள் பறந்துவந்து சைப்ரஸ் தீவின் கப்பல்களை தீக்கிரையாக்கின.

முஸ்லீம்களின் கப்பல்களில் முன்னுள்ள கப்பல்களில் விழும் தீப்பொறிகளை பின்னுள்ள கப்பல்கள் கடல் நீரைவாரியிறைத்து அணைத்தன.

ஆகவே முஸ்லீம்களின் கப்பல்களில் சேதங்கள் அதிகம் ஏற்படவில்லை.

ஆனால் சைப்ரஸ்தீவு கப்பல்கள் நெருப்பில் பெரும் சேதமடைந்தன.

இந்த புதிய வியூகத்தை பார்த்த சைப்ரஸ் தளபதியும்,
வீரர்களும் திகைத்துப்போயினர்.

முஸ்லீம்களின் கப்பல்கள் தரையை தொட முஸ்லீம் வீரர்கள் கப்பல்களின்
பாதுகாப்பு வீரர்கள் தவிர மற்றவர்கள் தரையில் இறங்கினர்.

முன்பே நடுப்பகுதியில் இறங்கிய வீரர்களுக்கும்
சைப்ரஸ் வீரர்களுக்கும் கடுமையான சண்டைகள் நடந்து வந்தன.

முஸ்லீம் வீரர்களின்
வாள்கள் நீளமாகவும்
எடை குறைவாக இருந்தன.
முஸ்லீம்களின் புதிய கண்டுபிடிப்பான
புதுமையான இரும்புக் கலவையால் செய்யப்பட்ட வாள்கள்
எடை குறைவாகவும் மிகவும் வலிமையாகவும் இருந்தன.

ஆனால் சைப்ரஸ் வீரர்களின் வாள்கள் குட்டையாகவும், மிகுந்த எடையுடனும் இருந்தன.

ஆகவே முஸ்லீம் வீரர்கள் மிகலாவகமாக எதிரி வீரர்களை தூரத்தில் வைத்தே கொல்ல முடிந்தது.

பக்கவாட்டில் வந்த முஸ்லீம் வீரர்கள் கடுமையான தாக்குதல்களை தொடுக்க சமாளிக்க முடியாமல் பின்னடைந்த சைப்ரஸ் படைகள்
பின்பக்கமாக திரும்பி ஓடின.

அப்போது அந்த அதிசயம் நடந்தது.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com