கீழக்கரையில் “வீரகுல தமிழர் படை இயக்கம்” என்ற புதிய தமிழ் தேசிய இயக்கம்..

கீழக்கரையில் கீழை பிரபாகரன் தலைமையில் புதிய தமிழ் தேசிய இயக்கமாக வீரகுல தமிழர் படை இயக்கம் இன்று (21/02/2019) கொடி அறிமுகத்தோடு துவங்கப்பட்டது.

இந்த இயக்கத்தின் நோக்கம் பற்றி கீழை பிரபாகரன் கூறுகையில், “இந்த இயக்கத்தின் அடிப்படை நோக்கம், தமிழினத்தின் உரிமைகளுக்காக போராடுவது. தமிழர் வரலாற்றை மீட்பது ,தமிழர் பண்பாடு ,கலாச்சாரம் ,விவசாயம் காக்க போராடுவது, தமிழ்நாட்டுத் தொழில், வணிகம் போன்ற துறைகளில் அந்நிய நாட்டு முதலாளிகள் மற்றும் இந்திய பெருமுதலாளிகளின் ஆதிக்கத்திலிருந்து மீட்கப் போராடுதல், தமிழகத்தில் பெருகிவரும் வடநாட்டவரின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த போராடுவது போன்றவையாகும்” என்றார்.