புதிய கமுதி மாவட்டம் – 25/11/2017, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் அறிவிப்பு???

கடந்த 28-08-2015 அன்று நடைபெற்ற தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க செயற்குழுவில் கமுதி, கடலாடி, முதுகுளத்தூர், திருச்சுழி மற்றும் புதிதாக தோற்றுவிக்க கோரியுள்ள பார்த்திபனூர் வட்டங்களை இணைத்து புதிய மாவட்டம் உருவாக்க கோரிக்கை வைக்கப்பட்டது. அதே போல் பரமக்குடி வட்டத்தினை பிரித்து பார்த்திபனூர், நயினார் கோயில் வட்டங்களாக பிரிப்பது என்றும், திருவாடனையை பிரித்து ஆர்.எஸ் மங்கலம் வட்டம் உருவாக்குதல் என்றும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆனால் அந்த கோரிக்கைகள் மீது நடவடிக்கை ஏதும் இல்லாமலே இருந்து வந்தது. இந்நிலையில் வரும் 25ம் தேதி இராமநாதபுரம் மாவட்டத்தில் நடக்கவிருக்கும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் அறிவிப்பை வெளியிட உள்ள சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்குமாறு இராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியருக்கும், பரமக்குடி உதவி ஆட்சியருக்கும் முதல்வர் அலுவலக குறிப்பை சுட்டிக்காட்டி இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலக பொது மேலாளரிடம் இருந்து உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

இந்த உத்தரவின் மூலம் இரண்டு வருடமாக அறிவிப்பாகவே இருந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதற்கான விடை வரும் 25ம் தேதி முதல்வர் கலந்து கொள்ளும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் தெரிந்துவிடும்.

உதவிக்கரம் நீட்டுங்கள்..