பசுமையை நோக்கி கீழக்கரை இஸ்லாமியா பள்ளி…

கீழக்கரை இஸ்லாமியா பள்ளி மாணவர்களுக்கு புத்தக படிப்பை தாண்டி சமுதாய விழிப்புணர்வு, வாழ்கை கல்வி, சுற்றுப்புற சூழல் பற்றிய அறிவினை வளர்ப்பதில் என்றுமே தவறியதில்லை.

இஸ்லாமியா மெட்ரிக் பள்ளியில்ப இயங்கி வரும் பசுமை தோட்ட குழுவினரால் ( Green Crop Team) அழகிய பசுமை தோட்டத்தை உருவாக்கி வருகிறார்கள். இதற்கான அனைத்து வசதிகளையும் நிர்வாகம் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் செய்து வருகிறது.

இது போன்று ஒவ்வொரு பள்ளிகளும் மாணவ, மாணவிகளுக்கு புத்தக பாடத்துடன் நிறுத்திக்கொள்ளாமல் வாழ்க்கைக்கு தேவையான சமுதாய பாடங்களையும் கற்பிக்கும் பொழுது, எதிர்கால தலைமுறை சிறந்த தலைமுறையாக உருவெடுக்கும் என்பதில் ஐயமில்லை.