Home செய்திகள் தமிழக கேரள எல்லை காவல் துறையினரின் முக்கிய கலந்தாய்வு கூட்டம்..

தமிழக கேரள எல்லை காவல் துறையினரின் முக்கிய கலந்தாய்வு கூட்டம்..

by mohan

தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களுக்கு இடையே நடைபெறும் குற்றச் செயல்களை தடுப்பது குறித்து காவல் துறையினருக்கான முக்கிய கலந்தாய்வு கூட்டம் குற்றாலத்தில் நடைபெற்றது. தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள மாவட்டங்களான தென்காசி மற்றும் கொல்லம் மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளர்கள் R. கிருஷ்ணராஜ் IPS மற்றும் K.B.ரவி IPS ஆகியோரின் தலைமையில் காவல் துறையினருக்கான முக்கிய கலந்தாய்வுக் கூட்டம் குற்றாலத்தில் நடைபெற்றது. இதில் இரு மாநிலங்களுக்கும் இடையில் நடைபெறும் குற்றச் செயல்கள் நடைபெறாமல் தடுப்பது குறித்தும், குற்றவாளிகளின் ஊடுருவலின் போது இரு மாநில காவல் துறையினரும் ஒன்றிணைந்து குற்றவாளிகளை கைது செய்வது குறித்தும், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் புகையிலைப் பொருட்கள் போன்றவை ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு கொண்டு செல்லாதவாறு இரு மாநில எல்லைகளின் சோதனைச் சாவடிகளில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணிப்பது போன்ற முக்கிய செயல்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தென்காசி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மணிமாறன், புனலூர் துணை காவல் கண்காணிப்பாளர் அனில் குமார், கேரளா INT துணை காவல் கண்காணிப்பாளர் அனில் தாஸ், பயிற்சி துணை காவல் கண்காணிப்பாளர்கள் நித்யா,செல்வி.சரண்யா, குற்றாலம் காவல் ஆய்வாளர் ஸ்டீபன் ஜோஸ், தென்காசி காவல் ஆய்வாளர் பாலமுருகன்,DCRB காவல் ஆய்வாளர் சரஸ்வதி, தனிப் பிரிவு காவல் ஆய்வாளர் ஸ்ரீ தாமரை விஷ்ணு, செங்கோட்டை காவல் ஆய்வாளர் சியாம் சுந்தர்,SBCID சார்பு ஆய்வாளர் தமிழரசன், புளியரை சார்பு ஆய்வாளர் முத்து கணேஷ், அச்சன்புதூர் சார்பு ஆய்வாளர் சஞ்சய் காந்தி,தென்காசி தனிப் பிரிவு சார்பு ஆய்வாளர் மாதவன் மற்றும் தமிழக கேரள காவல் துறையினர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!