Home செய்திகள் திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் குழந்தைகள் தின சிறப்பு ஓவியபோட்டி; பரிசுகள் வழங்கல்..

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் குழந்தைகள் தின சிறப்பு ஓவியபோட்டி; பரிசுகள் வழங்கல்..

by mohan

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு குழந்தைகளுக்கான சிறப்பு ஓவிய போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த தினம் நவம்பர் 14 நாடு முழுவதும் குழந்தைகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. குழந்தைகள் மீது நேரு காட்டியை அன்பை வெளிப்படுத்தும் விதமாகவே இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஜவஹர்லால் நேரு பிறந்த நாளை முன்னிட்டு நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் 14.11.2021 ஞாயிறு காலையில் குழந்தைகள் நாள் விழா நடைபெற்றது. விழாவை யொட்டி ,1-முதல் 8-வரை படிக்கும் குழந்தைகளுக்கான சிறப்பு ஓவியப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் நெல்லை,தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த இருநூறுக்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் பங்கு பெற்றனர். தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசும்,பாராட்டுச் சான்றுகளும் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அரசு அருங்காட்சியக மாவட்ட காப்பாட்சியர் சிவ.சத்திய வள்ளி தலைமை தாங்கினார். தேசிய நெடுஞ்சாலைத் துறையின் கோட்டப் பொறியாளர் ஆனையப்பன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்ற 1-3 ஆம் வகுப்பு: வெரோனிகா பெல் மேல்நிலை பள்ளி, அர்ஜுன் புஷ்பலதா வித்யா மந்திர் பள்ளி, முகிலா சங்கர் நகர் ஜெயேந்திரா பள்ளி.4,5,6 வகுப்பு முத்து சீனிவாசன்,ஜெயேந்திர சுவாமிகள் மேல்நிலைப்பள்ளி,

கமலேஷ் சங்கர்நகர் ஜெயேந்திரா மேல்நிலைப்பள்ளி, ஆஷிகா புஷ்பலதா மெட்ரிக் பள்ளி. 7-8 வகுப்பு வெரோனிகா அற்புதலீலா, பெல் பள்ளி, ஷோபனா,அரசு மேல்நிலைப்பள்ளி,கருங்குளம். செய்ந்தர்யா அனிஷா,அரசு மேல்நிலைப்பள்ளி,கருங்குளம் ஆகிய குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கினார். விழாவில் தொடர்ந்து பொதிகைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கவிஞர் பேரா சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில் “இந்தியச் சுதந்திரத்திற்காக பாடுபட்டவரும்,சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமருமான பண்டித ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாள் குழந்தைகள் நாளாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் வளர்ச்சிக்கு வித்திட்டவர் நேரு. விஞ்ஞானத்தினாலும், நவீன தொழில் நுட்பத்தினாலுமே இந்தியா வளர்ச்சி அடைய முடியும் என உறுதியாக நேரு இருந்தார். அதற்காக பல நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதனாலேயே அவர் நவீன இந்தியாவின் சிற்பி என அழைக்கப்பட்டார். குழந்தைகளை அதிகமாக நேசித்தவர் நேரு. குழந்தைகள் அவர் போல் நாட்டுப் பற்று கொண்டவர்களாக வளர வேண்டும்” இவ்வாறு கவிஞர் பேரா பேசினார். நிகழ்ச்சியில் நிறைவாக கலையாசிரியர் சொர்ணம் நன்றி கூறினார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com