Home செய்திகள் புளியங்குடி தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் பள்ளம்; சரி செய்யப்படுமா?

புளியங்குடி தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் பள்ளம்; சரி செய்யப்படுமா?

by mohan

புளியங்குடி தேசிய நெடுஞ்சாலை மெயின் ரோடு எம்ஜிஆர் சிலை அருகில் மிகப்பெரிய பள்ளங்கள் தொடர்ந்து பல வருடங்களாக விபத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்து வருகிறது. அந்த பள்ளங்களில் மழைக் காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. தற்போது தொடர் மழை பெய்து வரும் நிலையில் வெளியூர் செல்லும் பஸ்கள் லாரிகள் வேகமாக செல்வதால் பள்ளத்திற்குள் உள்ள தண்ணீர் மக்கள் மீதும், சைக்கிள், பைக் உள்ளிட்ட வாகனங்கள் மீதும், அருகிலுள்ள கடைகள் மீதும் தெறித்து விழுகின்றன.எனவே உடனடியாக பள்ளத்தை சரி செய்து விபத்தை தவிர்க்குமாறு இப்பகுதி சமூக செயற்பாட்டாளர் பீனிக்ஸ் ஜாபர் அலி கோரிக்கை விடுத்துள்ளார்.

விபத்து நடந்த பிறகு சரி செய்வது சிறப்புடையது அல்ல, மேலும் அகஸ்தியர் கோயில் தெரு, முத்து தெருவில் உள்ள வாறுகால் மெயின் ரோட்டில் உள்ள வாறுகால் உடன் இணைகிறது. ஆனால் மெயின் ரோட்டில் வாறுகால் தூர்வார படாததால் குப்பைகள் அடைத்து சாக்கடைகள் நான்கு புறமாகவும் வழிகிறது.மழைக் காலங்களில் சாக்கடைகள் மெயின் ரோடுகளில் ஓடுகின்றன. துர்நாற்றம் பயங்கரமாக வீசுகிறது.நோய் பரவும் அச்சம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது. எனவே சுகாதாரத்துறை, நகராட்சி அதிகாரிகள் மெயின் ரோட்டில் தண்ணீர் ஓடுவதை பெரிய ஓடைகளில் திருப்பி விடுமாறும், நோய் குறித்து மக்களிடையே எழுந்துள்ள அச்சத்தை போக்க வேண்டும் என்பதும் இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com