
தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் நடந்த இரத்ததான முகாமில் மருத்துவர்கள் கலந்து கொண்டு இரத்த தானம் வழங்கினர். இரத்த தானம் வழங்கிய மருத்துவர்களை கண்காணிப்பாளர் மரு. ஜெஸ்லின் பாராட்டி அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் இந்திய பல் மருத்துவ சங்கத்தின் சார்பில் இரத்ததான முகாம் 12.09.21 ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. இரத்ததான முகாமை தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ஜெஸ்லின், மூத்த பல் மருத்துவர் மருத்துவர் லதா ஆகியோர் தொடங்கி வைத்தனர். முகாமில் இந்திய பல் மருத்துவ சங்கத்தின் தென்காசி மாவட்ட நிறுவனரும், தலைவருமான மருத்துவர் மணிமாறன் இரத்ததானம் பற்றியும், அதன் அவசியம் குறித்தும் சிறப்புரையாற்றினார். இதில் தென்காசி மாவட்ட பல் மருத்துவர்கள் மரு.கதிரேசன், மரு.வரதராஜன், மரு.காளிதாசன், மருத்துவர் லதா, மருத்துவர் ஷெரின் மரு.சுடலைமணி, மரு. அல்போன்ஸ்,மரு. முருகேசன், மரு.மதன் குமார் ஆகியோர் கலந்து இரத்த தானம் வழங்கினார்கள். இரத்த தானம் வழங்கிய அனைத்து பல் மருத்துவர்களுக்கும், தென்காசி மாவட்ட இந்திய பல் மருத்துவ சங்கத்தினருக்கும் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ஜெஸ்லின் பாராட்டுதலையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார். இரத்த தானம் வழங்கிய பல் மருத்துவர்கள் அனைவருக்கும் மருத்துவமனை நிர்வாகம் சார்பாக பழங்களும்,பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. இரத்த தான முகாமை இரத்த வங்கி மருத்துவர் பாபு மற்றும் மருத்துவர் ரஜினிகாந்த் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் காளிதாசன், ரத்த தானம் வழங்கிய பல் மருத்துவர்களுக்கும், நிகழ்ச்சி ஏற்பாடு செய்த தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை நிர்வாகத்திற்கும், மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.