
விநாயகப்பெருமான் பற்றி பெரியவர் குறிப்பிடும்போது அணுகுவதற்கு எளியவர் விநாயகர் என்றார். இவரை ஆகமப்படி ஆலயங்களில் எந்திரப் பிரதிஷ்டை செய்தும் வழிபடலாம். மிக எளிமையாக களிமண்ணில் இவர் உருவைப் பிடித்து அறுகம்புல்லாலும் வழிபடலாம். இவருக்கு அஷ்டோத்ர நாமங்கள் உண்டு. இருந்தபோதிலும் இவருக்கு 16 பெயர்கள் மிக உசிதமானது. இந்த 16 பேர்களை மனதார நினைத்து பக்தி செலுத்தினாலே போதும். இவரது அருளுக்கு நாம் பாத்திரமாகிவிடுவோம். இவரின் அந்த 16 பேர்கள் விசேஷ சக்தி கொண்டது. சுமுகர், ஏகதந்தர், கபிலர், கஜகர்ணகர், லம்போதரர், விகடர், விக்நராஜர், விநாயகர், தூமகேது, கணாத்யஷர், பாலசந்த்ரர், கஜானனர், வக்ரதுண்டர், சூர்ப்பகர்ணர், ஹேரம்பர், ஸ்கந்தபூர்வஜர் – என்பதே அந்த 16 பேர்களாகும். இந்த பேரை பக்தியுடன் சொல்லி வழிபடுவோருக்கு கல்வி, வீரம், விவேகம், பிள்ளைப்பேறு, துணிவு, தனம், நிம்மதி. தான்யம், செளபாக்யம்,போகம், அறிவு, அழகு,பெருமை, அறம், குலம், நோயற்ற உடல் என்கிற பதினாறு பேறுகள் வாய்த்திடும்.இவ்வாறு மகாபெரியவர் கூறியுள்ளதை தன் உரையில் இந்திரா சௌந்தர்ராஜன் குறிப்பிட்டார். நிகழ்வு முகநூல் இணையவழிநடைபெற்றது.ஏற்பாடுகளை ஶ்ரீமடத்தின் தலைவர் டாக்டர் டி ராமசுப்பிரமணியன் பொருளாளர் கே ஶ்ரீ குமார் துணைத்தலைவர் பா சுப்பிரமணியன் சந்திரசேகரன் வெங்கடரமணி நாராயணி ஶ்ரீனிவாசன் ராதாகிருஷ்ணன் ஜோதிவேல் சங்கர ராம் ஶ்ரீராம் அஸ்விந் உள்ளிட்டோர் செய்து இருந்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.