Home செய்திகள் டெல்லியில் பெண் காவலர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து தவ்ஹீத் ஜமாத் ஆர்ப்பாட்டம்..

டெல்லியில் பெண் காவலர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து தவ்ஹீத் ஜமாத் ஆர்ப்பாட்டம்..

by mohan

டெல்லியில் பெண் காவலர் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் கடையநல்லூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆண்கள், பெண்கள்,பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். டெல்லியில் கடந்த வாரம் ராபியா என்கிற பெண் போலீசார் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், உண்மை குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய கோரியும் கடையநல்லூர் மணிக்கூண்டு அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் மாநில செயலாளர் செங்கோட்டை பைசல் மற்றும் மாநில மேலாண்மை குழு உறுப்பினர் அப்துந்நாசர் முன்னிலையில் மாவட்ட தலைவர் அப்துல் ஸலாம் தலைமையில் நடைபெற்றது.இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் அப்துல் பாசித்,மாவட்ட பொருளாளர் ஜலாலுதீன்,மாவட்ட துணைத்தலைவர் செய்யது மசூத் சாகிப், மாவட்ட துணை செயலாளர்கள் வல்லம் அஹ்மத்,பீர் முஹம்மது, பொட்டல் புதூர் சாதிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில மேலாண்மை குழு தலைவர் எம்.எஸ்.சுலைமான் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். அதில் அவர் பேசுகையில், இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக உலக அளவில் எடுக்கப்பட்ட புள்ளி விவரங்கள் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் ஒன்றிய அரசு பெண்களுக்கான பாதுகாப்பை முன்னெடுக்க தவறிவிட்டது. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. டெல்லியில் நடைபெற்ற இந்த சம்பவம் உலக அரங்கில் இந்தியாவிற்கு தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது. காவல்துறையில் பணியாற்றிய பெண் போலீசாருக்கு ஏற்பட்ட இந்த பாதிப்பு என்றால் மற்ற அரசு ஊழியர்களாக இருக்கும் பெண்களின் நிலை என்னவாகும் என்ற அச்சம் எழுந்துள்ளது. 21 வயதான இப்பெண் மனித மிருகங்களால் 50க்கும் மேற்பட்ட இடங்களில் பெண் போலீசாரின் உடல் சிதைக்கப்பட்டு கற்பழித்து படுகொலை செய்யப்பட்டு உள்ளார். இந்த சம்பவம் வெளி வராத வகையில் மூடி மறைக்கும் வேலையே அரங்கேற்றப்பட்டுள்ளது. டெல்லியின் பாதுகாப்புத்துறை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது என்கிற போது இந்த குற்றவாளிகள் இதுவரை கைது செய்து தண்டிக்கப்படாமல் இருப்பது ஒன்றிய அரசு பெண்களுக்கு பாதுகாப்பளிக்க தவறிவிட்டது என குற்றம் சாட்டினார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தொண்டரனி பொறுப்பாளர் புகாரி, மாணவரணி பொருப்பாளர் அலாவுதீன் மற்றும் தென்காசி மாவட்டம் கடையநல்லூர், ரஹ்மானியாபுரம், மக்காநகர் ,மதினா நகர், தவ்ஹீத் நகர், இக்பால் நகர், மாவடிக்கால், திரிகூடபுரம், புளியங்குடி, வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், தென்காசி, அச்சன்புதூர், வடகரை, செங்கோட்டை, வாவா நகரம்,வீராணம், மாலிக்நகர், பொட்டல்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆண்கள், பெண்கள் குழந்தைகள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இறுதியில் மாவட்ட துணைச் செயலாளர் வல்லம் அஹ்மத் நன்றி கூறினார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com