
தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் செவிலிய கண்காணிப்பாளர்களுக்கு புதிய அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது. கடந்த பல வருடங்களாக தென்காசி அரசு தலைமை மருத்துவமனை செவிலிய கண்காணிப்பாளர்களுக்கு நிரந்தரமாக ஒரு அலுவலகம் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ஜெஸ்லின் புதிய விசாலமான அலுவலகத்தை ஏற்பாடு செய்து அதனை 01.09.21 புதன் கிழமை குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார். இது குறித்து செவிலிய கண்காணிப்பாளர்கள் கூறும் போது, செவிலிய கண்காணிப்பாளர் அலுவலகம் ஏற்பாடு செய்து தந்ததுடன், திறப்பு விழாவில் குத்துவிளக்கேற்றி வரலாற்று சிறப்புமிக்க காரியத்தை மனதார செய்து கொடுத்த நமது மருத்துவமனை கண்காணிப்பாளர் அவர்களுக்கு அனைத்து செவிலிய கண்காணிப்பாளர் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர். இந்த விழாவில் மருத்துவர் மணிமாலா, செவிலியர் கண்காணிப்பாளர்கள் சாந்தி, பத்மாவதி, திருப்பதி, ராஜாத்தி ஜெகதா, வசந்தி, முத்துலட்சுமி மற்றும் தென்காசி அரசு மருத்துவமனை அனைத்து செவிலியர்கள், மருந்தாளுநர்கள், ஆய்வக நுட்புனர்கள், மற்றும் பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் அனைவருக்கும் விருந்து வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் அனைத்து ஏற்பாடுகளை மருத்துவமனை செவிலியர்களும், செவிலியர் கண்காணிப்பாளர்களும் செய்திருந்தனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.