தென்காசி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வைத்திருந்த 4 நபர்கள் கைது.

தென்காசியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டனர். தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தென்காசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சார்பு ஆய்வாளர் கற்பக ராஜா தலைமையிலான காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டதில் சட்ட விரோதமாக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த இரட்டை குளம் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த லோகநாதன் (36), தென்காசி பாறையடி தெருவை சேர்ந்த சாகுல் ஹமீது (36), தைக்கா தெருவைச் சேர்ந்த சலீம்(48), மேல வாலிபன் பொத்தையை சேர்ந்த பிரசன்னா (21) ஆகிய நான்கு நபர்கள் கைது செய்யபட்டனர்.மேலும் அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த 25,141 மதிப்பிலான புகையிலை பொருட்கள் மற்றும் ஒரு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

உதவிக்கரம் நீட்டுங்கள்..