
வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்கான உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம் புளியங்குடி நகர எஸ்டிபிஐ கட்சி சார்பில் கல்வத் நாயகம் தைக்காவில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தென்காசி மாவட்டத்தின் புதிய மாவட்ட தலைவர் யாசர் கான் கலந்து கொண்டார். முக்கிய இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட பொதுச்செயலாளர் ஷேக் சிந்தா மதார், தென்காசி மாவட்டச் செயலாளர்கள் சிக்கந்தர், சர்தார், இம்ரான் கான், வாசுதேவநல்லூர் தொகுதியின் துணைத் தலைவர் அஹமது, தொகுதி செயலாளர் ஜார்ஜ், புளியங்குடி நகர நிர்வாகிகள் மற்றும் கிளை நிர்வாகிகள், வாசுதேவநல்லூர் நகர நிர்வாகிகள் மற்றும் கிளை நிர்வாகிகள், பாம்பு கோயில் நகர நிர்வாகிகள் மற்றும் கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் புளியங்குடி எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் ( 10,12,17,18,21,22,23,25,29,31,30,32 ) ஆகிய 12 வார்டுகளில் போட்டியிடுவது என்றும், புளியங்குடியில் அதிகமான கிளைகளை தொடங்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.