மேலப்பாளையம் அரசு மருத்துவமனையில் சுற்றித்திரியும் வெறி நாய்களை அப்புறப்படுத்த தமுமுக மமக கோரிக்கை..

மேலப்பாளையம் அரசு மருத்துவமனையில் சுற்றித்திரியும் வெறி நாய்களை அப்புறப்படுத்த கோரி நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் தமுமுக மனிதநேய மக்கள் கட்சியினர் நேரில் மனு அளித்தனர். நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் அரசு மருத்துவமனையில் தஞ்சம் புகுந்திருக்கும் வெறிநாய்களால் மருத்துவ மனைக்கு வரும் நோயாளிகளிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. மேலும் இரவு நேரங்களில் உள் நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள் தூங்குவதற்கு முடியவில்லை. வெறி நாய்களால் பச்சிளம் குழந்தைகளுக்கு ஏதேனும் ஆபத்து வந்து விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.எனவே அரசு மருத்துவ மனையில் சுற்றித் திரியும் வெறிநாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என தமுமுக மமக மாவட்ட துணை தலைவர் தேயிலை மைதீன் , மாவட்ட துணை செயலாளர் அ.காஜா ,ஐபிபி மாவட்ட செயலாளர் K.A.ஞானியார், வடக்கு பகுதி தலைவர் குதா முகம்மது, மமக செயலாளர் K.K. அப்துல் அஜிஸ், தமுமுக செயலாளர் துபை ஜபருல்லாஹ், பொருளாளர் காயங் கட்டி மீரான், 38 வது வார்டு பொறுப்பாளர் கல்ஸ் மைதீன் பிள்ளை ஆகியோர் நேரில் சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்