பாளையங்கால்வாய் சாலையை சீரமைக்க தமுமுக மமகவினர் வலியுறுத்தல்.

நெல்லையில் உள்ள பாளையங்கால்வாய்சாலையை சீரமைக்க வலியுறுத்தி மேலப்பாளையம் வடக்கு பகுதி தமுமுக மமக சார்பில் மண்டல உதவி செயற் பொறியாளரிடம் மனு அளிக்கப்பட்டது. மனுவை பெற்றுக் கொண்ட உதவி செயற் பொறியாளர் லெனின் உரிய நடவடிக்கைஎடுப்பதாக உறுதி அளித்தார். திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் குறிச்சி வாய்க்கால் பாலம் முதல் மேலப்பாளையம் முஸ்லிம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வாய்க்கால் பாலம் வரை குண்டும் குழியுமாக உள்ள சர்வீஸ் சாலையில் புதிய தார் சாலை அமைத்திட வலியுறுத்தி, நெல்லை மாநகராட்சி மேலப்பாளையம் மண்டல உதவி செயற்பொறியாளர் லெனினை சந்தித்து தமுமுக-மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட துணை தலைவர் தேயிலை மைதீன் தலைமையில் அளிக்கப்பட்டது. மனுவை பெற்றுக் கொண்ட உதவி செயற் பொறியாளர் லெனின் உரிய நடவடிக்கைஎடுப்பதாக உறுதி அளித்தார். இந்நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் அ.காஜா , வடக்கு பகுதி தமுமுக செயலாளர் துபாய் ஜபருல்லா கான், மனிதநேய மக்கள் கட்சி வடக்கு பகுதி செயலாளர் K.K.அப்துல் அஜிஸ், பொருளாளர் கா.அ.மீரான் மைதீன், துணை தலைவர் ராஹத் செய்யது அலி , துணை செயலாளர்கள் முஸ்தாக் அகமது, அல்ஜன்னத் செய்யது அலி, 38வது வார்டு தலைவர் கல்ஸ் மைதீன் பிள்ளை ஆகியோர் உடனிருந்தனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்